ரயில்கள் நாளையும் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

 

ரயில்கள் நாளையும் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை நிவர் புயல் உலுக்கி எடுத்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வங்கக்கடலில் சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டிருக்கும் அந்த புயல் சுமார் 11 கி.மீ வேகத்தில் நகருவதாகவும், 145 கி.மீ வேகத்தில் காற்று வீசி கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையிலேயே பல இடங்களில் அதீத கனமழை பெய்து வருவதால், மீண்டும் வெள்ளம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரயில்கள் நாளையும் ரத்து – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக 7 மாவட்டங்களில் பேருந்துகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் சேவைகளும் இன்று ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில், கனமழை தொடருவதன் காரணமாக திருச்சி, குமரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் 27 விரைவு ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கான கட்டணங்கள் திருப்பி அளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.