சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

 

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

மூன்றுநாள் சுற்றுப்பயணமாக சென்னையில் இருந்து ஊட்டி புறப்பட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

தமிழக சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று கோலாகலமாக விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சட்டப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப்படம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இதனால் 5 நாட்கள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வருகை புரிந்துள்ளார். சட்டப்பேரவை நூற்றாண்டு விழா நேற்று முடிவடைந்த நிலையில் இன்று காலை சென்னையில் இருந்து கோவை செல்லும் குடியரசுத் தலைவர் ஊட்டிக்கு அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் செல்கிறார். சாலை வழியாக ஊட்டி ராஜ்பவன் அடையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

சென்னையில் இந்த பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தம்!

இந்நிலையில் சென்னையில் இருந்து கோவை புறப்பட்டுச் சென்றார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை செல்கிறார். குடியரசுத் தலைவர் தனி விமானத்தில் ஊட்டி செல்வதையொட்டி சென்னை விமான நிலைய பகுதி, சைதாப்பேட்டை, சின்னமலை, கிண்டி உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உதகை செல்வதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் குடியரசுத் தலைவரின் வருகையை ஒட்டி போலீசார் குழுக்களாக அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.