ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீசார்

ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீசார்

கோபிசெட்டிபாளையத்தில், வாகன ஓட்டிகளுக்கு ஒலி பெருக்கி மூலம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் போக்குவரத்து காவல்துறையினரின் செயல், பொதுமக்களின் பாராட்டுதலை பெற்றுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீசார்

இந்நிலையில்,வாகன ஓட்டிகளுக்கு கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோபிசெட்டிபாளையம்
மொடச்சூர் சாலை பிரதான சிக்னலில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி தலைமையிலான குழுவினர் நாள்தோறும் ஒலிபெருக்கி மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரசாரத்தின்போது
முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்டவற்றை வலியுறுத்தும் போக்குவரத்து போலீசார், முதியவர்கள் மற்றும் குழந்தைகளை
பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்கவும்
வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஒலிபெருக்கி மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் போக்குவரத்து போலீசார்