ஈரோடு -பஸ்கள் ஓட தொடங்கியதால் ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்

 

ஈரோடு -பஸ்கள் ஓட தொடங்கியதால் ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்


ஈரோடு செப் 2 –
ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது ஈரோடு நாச்சியப்பா வீதி முக்கிய போக்குவரத்து நிறைந்த பகுதியாகும் ஈரோடு பஸ் நிலையத்திலிருந்து நாச்சியப்பா வீதி வழியாக தான் பஸ்கள் வெளியே செல்கின்றன மேலும் நாச்சியப்பா வீதியில்

ஈரோடு -பஸ்கள் ஓட தொடங்கியதால் ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்

நூற்றுக்கணக்கான கடைகள் உள்ளன மருத்துவமனை ஓட்டல் பைக் மெக்கானிக் கடைகள் அதிக அளவில் உள்ளன கடந்த சிலமாதங்களுக்கு முன்பு மேட்டூர் ரோடு ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது பெருந்துறை ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் கேவி என் ரோட்டிலிருந்து இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மேட்டூர் ரோடு வழியாக செல்கின்றன ஆனால் அதே நேரத்தில் சத்தி ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் தற்போது நாச்சியப்ப வீதி வழியாக சென்று சவிதா பஸ் நிறு த்தத்தில் திரும்பி செல்கின்றன இதனால் ஈரோடு நாச்சியப்பா வீதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது பகல் மதியம் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டு வந்தது இந்நிலையில் நேற்று முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து செயல்பட

ஈரோடு -பஸ்கள் ஓட தொடங்கியதால் ஈரோடு நாச்சியப்பா வீதியில் போக்குவரத்து நெரிசல்

தொடங்கியது பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் அனைத்தும் நாச்சியப்பா வீதி வழியாக செல்கின்றன இதனால் நாச்சியப்பா வீதியில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது காலை மதியம் மாலை நேரங்களில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன இதனால் சாலையோரம் நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் நடந்து செல்கின்றனர் நாச்சியப்பா வீதி நால்ரோடு பகுதியில் போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி வருகின்றார்
செய்தி;ரமேஷ்கந்தசாமி