வார வாரம் லாக்டவுன் நீட்டிப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் அரசை குற்றம் சாட்டிய வர்த்தகர்கள்

வார வாரம் லாக்டவுன் நீட்டிப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் அரசை குற்றம் சாட்டிய வர்த்தகர்கள்

வார வாரம் லாக்டவுனை நீட்டித்து குழப்பத்தை அதிகரிக்கிறார்கள் என்று டெல்லி அரசு மீது வர்த்தகர்கள் குற்றம் சாட்டினர்.

டெல்லியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் கடந்த மாதம் 19ம் தேதி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் லாக்டவுனை மேலும் ஒரு வாரம் நீட்டித்தார். லாக்டவுனால் டெல்லி கடைக்காரர்கள் மற்றும் வர்த்தகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு தங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக சாந்தினி சவுக் வர்த்தகர்கள் பரிஷத் தலைவர் சுரேஷ் பிண்டால் கூறியதாவது:

வார வாரம் லாக்டவுன் நீட்டிப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் அரசை குற்றம் சாட்டிய வர்த்தகர்கள்
சுரேஷ் பிண்டால்

உயிர்களை காப்பாற்ற லாக்டவுன் அவசியம் ஆனால் டெல்லி அரசு எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் தொடர்ந்து லாக்டவுனை நீட்டித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு லாக்டவுன் விதிப்பதற்கு பதிலாக தொடர்ந்து வாரவாரம் லாக்டவுனை நீட்டித்து வர்த்தகர்களின் குழப்பத்தை அதிகரிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளிடமிருந்து அவர்கள் அறிக்கைகள் பெறுகிறார்கள். ஆனால் அவர்களால் ஏன் அறிவியல்பூர்வமாக முடிவுகளை எடுக்க முடியாது. நிலவரம் வர்த்தகர்களுக்கு விரும்பத்தக்கதாக இல்லை.

வார வாரம் லாக்டவுன் நீட்டிப்பது குழப்பத்தை அதிகரிக்கிறது.. கெஜ்ரிவால் அரசை குற்றம் சாட்டிய வர்த்தகர்கள்
லாக்டவுன்

கடந்த ஆண்டு, மின்சாரம் மீதான நிலையான மீட்டர் கட்டணங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம். கடைகள் கூட திறக்கப்படாததால் தண்ணீருக்கான கட்டணங்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும். பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றததால் கடைகளை மூடும் நிலைக்கு கட்டாயப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.