வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

 

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஈரோடு

மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, ஈரோட்டில் தொழிற் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நாடு முழுவதும் நேற்று தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிஐடியு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம், தமிழக விவசாய சங்க மாநில துணை தலைவர் துளசி மணி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஏஐடியூசி, ஐஎன்டியூசி, டாஸ்மாக் ஊழியர் சங்க உள்ளிட்ட அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயிகளை பாதிக்கும் மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்ப வர வலியுறுத்தியும், மின் திருத்த சட்டத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தினர்.

மேலும், டெல்லியில் 7 மாதங்களாக போராடும் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற, அவர்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு சுமூக தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வேணடுகோள் விடுத்தனர். அத்துடன், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தொழிலாளர்களுக்கு அரசு உதவித் தொகை வழங்குதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.