பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் என த.பெ.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் என த.பெ.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டத்தில், பெரியார் பிறந்த நாள் அன்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் ரஞ்சித், ரங்கராஜ், அசோக் ஆகிய மூன்று பேரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த தகவல்கள் வெளியான நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. உள்பட பலர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் என த.பெ.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்த நிலையில், இந்த நிகழ்வை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் த.பெ.தி.க பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் கூறுகையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தது குற்றம் என்பது போல மூன்று காவலர்களும் தண்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவிப்பது குற்றம என தமிழக அரசு அறிவித்து உள்ளதா எனவும் காவல் துறையினர் மாலை அணிவிக்க கூடாதா என கேள்வி எழுப்பினார்.ஜாதி சங்க தலைவர்களின் சிலைக்கு உயர் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செய்வதாகவும், மாவட்ட அளவில் உள்ளவர்கள் கோவில்களில் தீ மிதி விழாவில் கலந்து கொள்கின்றனர் எனவும் குற்றம் சாட்டினார்.

பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் என த.பெ.தி.க கண்டன ஆர்ப்பாட்டம்!

மதசார்பற்ற நாட்டில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை பெற்று தந்த பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து காவலர்கள் மரியாதை செலுத்தி உள்ளனர்.பெரியார் சிலைக்கு மரியாதை செய்த காவலர்களின் இடமாற்றத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் கு.ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.