“சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்”- நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

 

“சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்”- நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

நீலகிரி

நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும், விதிகளை மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலாத்துறை சார்பில் நடந்த பொங்கல் விழாவில் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, கலந்துகொண்டு பழங்குடி மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை வெளியூர் பயணிகள் காண எந்தவித தடையும் இல்லை என்றும், சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து கண்டுகளிக்கலாம் என்றும்கூறினார்.

“சுற்றுலா பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் அபராதம்”- நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

மேலும், விதிகளை மீறி முக கவசம் அணியாமல் வருவோருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், தனியார் தங்கும் விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகள் முகக் கவசம் அணியா விட்டால், அந்த விடுதியின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்ததார்.