குமுளியில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

 

குமுளியில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

கேரளாவில் குமுளியில் சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரி, தமிழகம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வீரியம் கூடி வருகிறது.

குமுளியில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக கேரளாவில் கொரோனா மட்டுமின்றி நிலச்சரிவு, கனமழை என இயற்கை சீற்றம் அம்மாநிலத்தை வாட்டி வதைத்தது. இருப்பினும் தற்போது கேரளாவில் தளர்வுகள் அளிக்கப்பட்டு சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டுள்ளது.

குமுளியில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை: கட்டணம் எவ்வளவு தெரியுமா?

இந்நிலையில் குமுளி அருகே உள்ள பத்துமுறியில், சுற்றுலா ஹெலிகாப்டர் சேவை துவங்கியுள்ளது. குமுளியில் இருந்து அரை மணி நேரத்தில் மூணாறு சென்று இயற்கையின் எழிலை ரசிக்கலாம். ஆனால் இதற்கான கட்டணம் 11 ஆயிரம் என தெரிகிறது. கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்தஹெலிகாப்டர் சேவை தொடங்கப்பட்டுள்ளது.