kaappan-mobile kaappan-large
  • September
    23
    Monday

Main Area

கண்களை கவரும் குல்லு தசரா திருவிழா

ஹிமாச்சல பிரதேசத்தில் கொண்டாடப்படும் குல்லு தசரா சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. 


தசரா திருவிழா நவராத்திரி திருவிழா, விஜயதசமி, துர்கா பூஜை, பத்துகம்மா பண்டுக்கா,ராம்லீலா, குல்லு தசரா என்று வெவ்வேறு பெயர்களில் வெவ்வேறு விதங்களில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதில், மைசூரில் கொண்டாடப்படும் தசரா மிகவும் பிரபலமானது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கொண்டாடப்படும் குல்லு தசரா வித்தியாசமானது.
தமிழகத்தில் தசரா

kulasai dussera
kulasai dussera


தமிழகத்தில் தசரா நவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக குலசேகரப்பட்டனத்தில் கொண்டாடப்படும் தசரா பிரசித்தி பெற்றது
பெண் தெய்வங்களைப் போற்றும் விழா என்பதால் நவராத்திரியின் போது 3 நாட்கள் துர்கையையும், 3 நாட்கள் லட்சுமியையும், 3 நாட்கள் சரஸ்வதியையும் மக்கள் வழிப்படுகின்றனர். மேலும், தங்கள் வேண்டுதல் நிறைவேற விரதமிருந்து காளி, துர்கை உள்ளிட்ட பெண் கடவுளின் வேடங்களை அணிந்து, நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.
குல்லு தசரா
இந்த ஆண்டு, அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி  தொடங்கும் தசரா திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.  அனைத்து மாநிலங்களிலும் தசரா திருவிழா 10-வது நாளில் முடியும். ஆனால், ஹிமாச்சல பிரதேசத்தில் குல்லு தசரா சற்று வித்தியாசமாக 10-வது நாள் தொடங்கி ஒருவாரம் வரை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். வித்தியாசமாக கொண்டாடப்படும் இந்த தசரா சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. 

dussera festival
dussera festival


ஸ்ரீ ராமர் ராவணனை வென்று அயோத்திக்கு திரும்பிய வெற்றியை போற்றும் விதமாக தசரா விழாவை அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.  
தசராவின் போது, கோயில் சிற்பங்களை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் காட்சியும்  பக்தர்கள் கடவுள் வேடமிட்டு நடனமாடும் காட்சியும் காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
தீமையை அழித்து நன்மையே வெல்லும்

ravana killed by rama
ramleela


“தீமையை அழித்து நன்மையே வெல்லும்” என்பதை குறிக்கும் வகையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராவண வதம் நடக்கும். அப்போது, ராவணனின் உருவ பொம்மையை எரித்து மக்கள் கொண்டாடுவார்கள்.
இது தவிர, பாரம்பரிய நடனங்கள், வித்தைகள், நாடகங்கள் என்று வெகு விமர்சையாக நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.  இவை அனைத்தும் குல்லுவில் உள்ள தால்பூர் மைதானத்தில் நடத்தப்படும். 
எனவே, சுற்றுலாப் பயணிகள் இங்கு நடக்கும்  தசரா விழாவைக் காண வேண்டியது அவசியம்.

dussera dance
traditional folk dance

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக சர்வதேச நாட்டுப்புற நடன விழாவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. விழாவில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நடனகுழுவினர் குல்லு மணலிக்கு வருகை தருவார்கள். பல்வேறு நகரங்களிலிருந்து கைவினை கலைஞர்கள் , வர்த்தகர்கள் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்த வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

poongodi Mon, 09/23/2019 - 12:03
kullu dussara Himachal pradesh ramleela international folk dance kullu dussera in himachal pradesh லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

kullu dussera attracts tourists across the world

News Order

0

Ticker

1 கொடைக்கானல் படகு சவாரி.. வருஷ வாடகை ரூ.8 தான்! அதிர்ச்சியை போட்டுடைக்கும் நாம் தமிழர் கட்சி!

கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித் தரும் திருப்பதி வெங்கடாஜலபதி ஆந்திராவில் நின்றுக் கொண்டிருக்கிறார். கோடிக்கணக்கில் வருமானத்தை அள்ளித்தரும் சபரிமலை ஐயப்பன் கேரளாவில் உட்கார்ந்திருக்கிறார்... இங்கே சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் இந்த பக்கம் ஆந்திராவின் திருப்பதியிலும், அந்த பக்கம் கேரளாவின் சபரிமலையிலும் தமிழர்கள் தாரை வார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற பேச்சு ரொம்ப வருஷமாகவே இருக்கிறது. வெளிநாட்டின் மீதுள்ள மோகத்தைக் கிண்டலடிக்கும் விதமாக ‘என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்கிற பாடலை உதாரணமாகச் சொல்வோம். ஆனால், ஆந்திராவையும், கேரளாவையும்... இவ்வளவு ஏன், கர்நாடகாவையும் போல நம்மிடம் இருக்கும் இயற்கை வளத்தையும், சுற்றுலா இடங்களையும் நாம் பாதுகாக்கிறோமா என்றால் இதற்கு விடையாக பூஜ்யம் தான் கிடைக்கிறது.

boat

பழநி மலையில் நவபாஷண சிலையை யார் குடைந்தெடுத்தார்கள் என்பதற்கான பதில் இத்தனை வருஷங்களில் கிடைக்கவே இல்லை. கீழடியின் ஆராய்ச்சி அதள பாதாளத்திற்குச் சென்று, ஆட்சியாளர் குஜராத்திற்கு மாற்றப்பட்டதன் மர்மம் இதுவரையில் வெளியாகவில்லை. தமிழகம் முழுவதும் ஆலயங்களில் இருக்கிற விலை மதிக்க முடியாத பழங்கால சிற்பங்கள் எல்லாம் கால் முளைத்து வெளிநாட்டிற்கு நடந்தே சென்றதை அறநிலையத்துறையில் இருந்தவர்கள் எல்லோருமே வேடிக்கை தான்  பார்த்துக் கொண்டிருந்தார்கள். இதோ இருக்கிற மகாபலிபுர சிற்பங்களை, ‘இயேசு அழைக்கிறார்’ என்று எழுதி வைப்பதற்கும், காதலின் உயரத்தை கல் சிற்பங்களில் பறைச்சாற்ற, ஆர்ட்டின் எல்லாம் வரைந்து, அதற்குள்ளே அம்புக்குறி போட்டு காயத்ரி, குமார்’ எனப் பெயர்களை செதுக்கி வைக்கிறோம். உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரீனாவின் மணலில் பீர் பாட்டில்களை ஆவேசமாக உடைத்துப் போட்டு, பார்க்காத காதலியை கண்டபடி திட்டித் தீர்க்கிறோம். 
இந்நிலையில், அரசு அதிகாரிகள் ஒவ்வொரு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் செய்து வரும் அராஜக போக்கும், கொள்ளை அடிக்கும் கமிஷன் தொகையும் நாம் தமிழர் கட்சியின் புண்ணியத்தில் வெளியே வந்திருக்கிறது.  மேற்கு மலைத் தொடர்களில் அமைந்துள்ள கொடைக்கானல் மலைப்பகுதி, இந்தியாவில் மிக முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்று. தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரமாகவே சுற்றுலாத்துறை கொடைக்கானலைப் பாதுகாக்க வேண்டிய நிலையில், கமிஷன் வாங்கிக் கொண்டு, கட்டிடங்களைக் கட்ட அனுமதிப்பது, அராஜகம் செய்வது, பிளாஸ்டிக் பொருட்களை அனுமதிப்பது என்று நெடுங்காலங்களாகவே முறையான பராமரிப்பில்லாமலேயே வைத்திருந்தது. 
கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்களில் பெரும்பாலானோர் அங்கு அமைந்துள்ள நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரியை மகிழ்ந்து வருவார்கள். பெரும்பாலும் எப்போதும் கூட்டம் அலைமோதும் இந்த படகு குழாமில், காத்திருந்து படகு சவாரியை அனுபவித்து திரும்புபவர்கள் தான் அதிகம். இந்த ஏரியைச் சுற்றி சாலை இல்லாத அந்த காலத்தில் ஏரியைச் சுற்றி அமைந்துள்ள வீடுகளில் வசித்தவர்கள், ஏரியின் மறுகரைக்கு செல்வதற்காக படகுகளை பயன்படுத்தி பயணித்து வந்தனர். 1921 ஆம் ஆண்டு கொடைக்கானல் அரசு நிர்வாகத்தால் அந்த படகுகளை நிறுத்துவதற்கு ஒரு கூரை அமைத்துக் கொள்ள அவர்களுக்கு கொடைக்கானல் படகு குழாம் என்ற பெயரில் அனுமதி அளிக்கப்பட்டது. வெறும் எட்டு சென்ட் அளவிலான நிலம் ஒதுக்கப்பட்டு ஆண்டு வாடகையாக ரூபாய் 8 மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. 49 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட இந்த குத்தகை மீண்டும் 1970 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு அப்போதும் ஆண்டு வாடகை அதே 8 ரூபாய்க்கு கொடுக்கப்பட்டது கொடுமை தான். கொடுக்கப்பட்ட 8 செண்ட் நிலம போக 10 செண்ட் அளவிற்கு நிலத்தை ஆக்கிரமித்து படகு குழாம் அமைத்துக் கொண்டது. கொடைக்கானல் போட் கிளப் என்ற பெயரில் இயங்கி வந்த இந்த தனியார் அமைப்பு இந்த குத்தகையை எடுத்து 150க்கும் மேற்பட்ட படகுகளை இறக்கி வருடத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்து வந்தது.

boat

இந்நிலையில், இதனை எதிர்த்து நாம் தமிழர் கட்சியினர் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.வெற்றிக்குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடைக்கானலில், 49 ஆண்டு குத்தகை காலம் முடிந்து பல மாதங்களாகியும் இன்னும் கொடைக்கானல் நிர்வாகம் இந்த படகு குழாமை கையகப்படுத்தவில்லை. ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறையால் கொடைக்கானல் நகரத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்த முடியாத நிலையில், கொடைக்கானல் ஏரியை சுத்தப…

gowtham Mon, 09/23/2019 - 11:31
kodaikanal boating படகு சவாரி தமிழகம் சுற்றுலா

English Title

Kodaikanal ferry ride .. Annual rent is only Rs. Let's shock the Tamil party!

News Order

0

Ticker

0 பங்கி ஜம்ப் பண்ண இனி ஃபாரினுக்கு போக வேண்டாம்... நம்ம நாட்டிலேயே அதகளம் பண்ணலாம்...

கடற்கரை சுற்றுலாவா அப்போ கோவாதான் போகனும். இனி பங்கி ஜம்பிங் என்னும் சாகச விளையாட்டுக்காகவும் கோவா போகலாம்.

goa

விடுமுறையை இயற்கை எழில் கொஞ்சும் கோவாவுக்குச் சென்று மகிழ்ச்சியாக செலவுசெய்ய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் கனவாக உள்ளது. நம்மில் பலரும் கோவா சென்று வரப் பலமுறை திட்டமிட்டிருப்போம். அதை ரத்து செய்தும் இருப்போம். சிலருக்கு மட்டுமே கோவா செல்லும் கனவு நனவாகியிருக்கும். மொரிஷியஸ் மால்தீவ்ஸ் போன்ற இடங்களுக்கு செல்வதைக் காட்டிலும் கோவாவுக்கு செல்வதையே பலர் முதன்மை விருப்பமாக கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர்கள் முதல் வெலைக்கு செல்ப்வர்கள் வரை எல்லோரட பட்ஜெட்க்கும் ஏற்ற சுற்றுலாவா கோவா இருக்கும். 5,000 ரூபாய் இருந்தால் போதும் கோவாவுக்கு சென்று வரமுடியும். உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள்  கோவாவிற்கு வந்து செல்கின்றனர். இரவு விடுதி, கடற்கரைகளைத் தாண்டி கோவாவில் இருக்கும் சுதந்திரமும், வெப்பநிலையும், நீர்வீழ்ச்சிகளும், பழைய தேவாலயங்களும், கலாச்சார நிகழ்ச்சிகளும், தீவுகளும்,பாரம்பரிய உணவுகளும் மக்களை சுண்டி இழுக்கிறது.

இந்நிலையில், வடக்கு கோவாவில் உள்ள மாயெம் ஏரியில் பங்கி ஜம்பிங் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக மாயெம் ஏரியின் மீது 55 மீட்டர் குதிக்கும் மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு 'ஜம்பிங் ஹைட்ஸ்' என்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

bungee jump

இதுபோன்ற சாகசங்களை சராசரி மக்கள் யாரும் பெரிதும் விரும்புவதில்லை என்றாலும், இதை விரும்பு மக்கள் இதை செய்ய வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். இந்தியாவில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டு பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. 

முதன்முதலாகப் பங்கி ஜம்பிங் விளையாட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தர காண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அங்கு 83 அடி உயரத்தில் குதிக்கும் மேடை அமைக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக அதிக உயரத்தில் குதிக்கும் மேடை அமைந்திருக்கும் இடம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர, மகாராஷ்டிராவில் உள்ள லோனாவ்லா, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் பங்கி ஜம்பிங் விளையாட்டு நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க ரூபாய் 1500 முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

poongodi Sat, 09/21/2019 - 17:09
"Goa tourism bungee jump 53 meters goabungeejumping லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

bungee jumping destination in India

News Order

0

Ticker

1 கேதார்நாத் யாத்திரை : குவியும் பக்தர்கள்

இமயமலையில் கடல் மட்டத்திலிருந்து 11,755 அடி உயரத்தில் உள்ள கேதார்நாத் சிவன் கோயிலுக்குச் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் முன்பதிவு செய்து, சிவனைத் தரிசித்து வருகின்றனர்.  

temple

உத்தர காண்ட் மாநிலம் இமயமலையில் அமைந்துள்ளது உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் சிவன்கோயில்.  இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் கேதார்நாத்தும் ஒன்று.  எனவே, தமிழகம் உட்படப் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் இந்த கோயிலுக்கு யாத்திரையை மேற்கொள்கின்றனர். 

சார்தாம் யாத்திரை

சார்தாம் (யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆகிய நான்கு தலங்களுக்கு ஒரே சமயம் தலயாத்திரை செல்வது)  என்றழைக்கப்படும் இப்புனித யாத்திரையை மேற்கொள்வதால் முக்தி கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. எனவே, முதலில் யமுனோத்ரியில் வழிபாடு நடத்தி விட்டு அதன்பின்னர் கங்கோத்ரி, கேதார்நாத் தலங்களில் தரிசனம் செய்துவிட்டு, இறுதியாக பத்ரிநாத் வந்து விஷ்ணுவை வழிபட்டு யாத்திரையைப் பக்தர்கள் நிறைவு செய்கின்றனர். 

ஆண்டின் 6  மாதங்கள் இக்கோயில்கள் கடும் பனியால்  சூழப்பட்டிருக்கும். அதன் காரணமாக, நான்கு கோயில்களின் நடையும் 6 மாதங்கள் வரை சாத்தப்படும். ஏப்ரல் மாதம் அட்சய திருதியையொட்டி திறக்கப்படும் இக்கோயில்களின் நடை தீபாவளி வரை திறந்திருக்கும். இக்கோயிலுக்கு நேரடியாகச் சாலை வழியாகச் செல்ல முடியாது. கௌரிகுண்ட் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தொலைவு வரை மலை ஏறியே செல்ல வேண்டும். 

temple
உத்தர காண்ட் வெள்ளம்

கடந்த 2013 ஆம் ஆண்டு உத்தர காண்டில் பெய்த கனமழையினால் கேதார்நாத் கோயிலைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டன.சார்தாம் யாத்திரைக்கு சென்ற 8000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கி இறந்தனர். ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர், வெளியேற முடியாமல் சிக்கித் தவித்தனர். அவர்களை இந்திய ராணுவத்தினரும், பேரிடர் நிர்வாகக் குழுவினரும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால், பக்தர்கள் சார்தாம் யாத்திரைக்குச் செல்ல பயந்தனர். 

அதைத் தொடர்ந்து, உத்தரா காண்ட் அரசு மேற்கொண்டுள்ள மறுகட்டமைப்பு பணிகளால் மக்கள் நம்பிக்கையுடன் சார்தாம் யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.2018-ம் ஆண்டு 26லட்சம் பக்தர்கள் கேதார்நாத் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.  

யாத்திரை செல்ல கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி வரை, ஆன்லைன் மூலமும் செல்போன் செயலி மூலமும் சுமார் 8 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் முன்பதிவு செய்துள்ளார். 

 
temple
சார்தாம் நெடுஞ்சாலை திட்டம்

கடந்த 2016-ம் ஆண்டு , டிசம்பர் மாதம் டேராடூனில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் . இதனால், யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வரும் காலங்களில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுகட்டமைப்பிற்கு வரவேற்பு

வெள்ளத்தால் சேதமடைந்த கேதார்நாத் செல்லும் நடைபாதையை சீரமைக்க 2660 கற்களை படிக்கட்டுகளாக செதுக்கி பயன்படுத்தியுள்ளனர். கோயிலுக்கு செல்லும்270 மீட்டர் தொலைவு வரையிலான பாதை 50 மீட்டர் அகலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு வருகை தளமும் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலான நேரத்திலும் கூட 3,000 பக்தர்கள் இந்த வருகை தளத்திலிருந்தே கேதார்நாத் கோயிலை தரிசிக்கமுடியும்.  இந்த மறுகட்டமைப்பிற்கு பக்தர்கள் பெருமளவில் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

மேலும், கேதார்நாத்தில் உள்ள அடிப்படை முகாம்களில் பக்தர்களுக்கான இலவச மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செப்டம்பர் 2-ம் தேதி சுவாமி விவேகானந்தா  மருத்துவமனையை  உத்தர காண்ட் முதல்வர் திரிவேந்திரா சிங் திறந்து வைத்தார். 12 மெத்தைகள், ஐசியு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கொண்ட இந்த மருத்துவமனையில் பக்தர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

poongodi Sat, 09/21/2019 - 15:17
"Kedarnath, pilgrims floods PM Modi kedarnathyatra லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

kedarnath: pilgrims counts increases

News Order

0

Ticker

1 மதிப்பு மிக்க பயண விருதுகளைத் தட்டி சென்ற கேரளா

பசிபிக் ஆசியப் பயண சங்கத்தின் (பாட்டா )மூன்று மதிப்புமிக்க பயண  விருதுகளைக் கேரள சுற்றுலாத் துறை வென்றுள்ளதுஇந்தியச் சுற்றுலாத் துறை ஒரு விருதை பெற்றுள்ளதுகடந்த 19-ம் தேதி, கஜகஸ்தான்  நாட்டின்  நூறு-சுல்தான்(ஆஸ்தான) நகரத்தில் நடைபெற்ற பாட்டா டிராவல் மார்ட் 2019 விழாவில் கேரள சுற்றுலாத்துறைக்கு பாட்டா 3 தங்க விருதுகளை வழங்கி கவுரவித்தது.
விருதுகளை கேரள சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், கேரளா சுற்றுலா இயக்குநர் பாலா கிரண் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

 

kerala tourism

இம்மூன்று விருதுகளில் ஒரு விருது குமரக்கோமில் பாரம்பரிய உணவகத்தை நடத்தி வரும் பெண்ணிற்கும், 2 விருதுகள் கம் அவுட் & ப்ளே (come out & play) என்னும் கேரள சுற்றுலாவின் விளம்பர பிரச்சாரத்திற்கும், பல்வேறு சிறப்பு வசதிகளை கொண்ட கேரள சுற்றுலாத் துறை இணையதளத்திற்கும் வழங்கப்பட்டது
 

இதுகுறித்து அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன், ”இந்த விருதுகள் கேரள சுற்றுலாத் துறைக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவமாகக் கருதுகிறேன். இதன்மூலம் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகளின் நம்பிக்கையைக் கேரள மாநிலம் பெறும். குமரக்கோமில் உணவகத்தை நடத்தி வந்த பெண்ணிற்கு விருது கிடைத்தது பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறதுஎன்றார்சுற்றுலா இயக்குநர் பாலா கிரண் கூறியதாவது, இந்த ஆண்டில் அதிகமான பாட்டா விருதுகளை கேரள சுற்றுலாத் துறை வென்றுள்ளது. இந்த விருது எங்கள் இலக்குகளை ஊக்குவிக்கவும்  கேரளாவை விரும்பத்தக்க இடமாக உயர்த்தவும் உதவும்எனக் கூறினார்.

kerala tourism

கடந்த ஆண்டு கேரள சுற்றுலாத் துறை  வளைகுடா நாடுகளில் எல்லாம் கேரள அச்சு ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. அதற்காக  இரண்டு பாட்டா தங்க விருதுகளைப் பெற்றதுஇந்த ஆண்டின் பாட்டா விருதுகள் உலகளவில் 78 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து 197 பதிவுகளை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

poongodi Sat, 09/21/2019 - 15:07
Kerala tourism patana award kerala tourism லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

kerala tourism bags the prestigious travel awards

News Order

0

Ticker

1 ஆன்லைனில் ரூம் புக் செய்யறீங்களா... இப்படியெல்லாம் மாட்டிக்காதீங்க!

தென்னகத்தின் காஷ்மீர் என்று பெருமைக்குரிய சுற்றுலா தளமாக இருக்கிறது மூணாறு. சுற்றிலும் அழகிய மலைகள், தேயிலை தோட்டங்களின் நடுவில் வெள்ளியை உருக்கி ஊற்றிக் கொண்டிருப்பதைப் போல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், வரையாடுகள், காட்டெருமைகள், காட்டு யானைகள் என வனமும், வனப்பும் சூழ்ந்த ரம்யமான பகுதியை கண்டு களிக்க புத்துணர்ச்சி பெறுவதற்காக  இந்தியர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் மூணாறு வந்து  செல்கின்றனர்.

munnar


அப்படி சுற்றுலாத் தலங்களுக்கு வந்த பின் தங்கும் விடுதிகளை தேடிய அலைந்த காலம் போய், தற்போது ஆன்லைனில் விடுதிகளைப் பார்த்து, விலையை விசாரித்து  புக் செய்துவிட்டு வரும் சுற்றுலாப் பயணிகள் தான் அதிகம். மூணாறு அருகே குறைந்த விலையில், சொகுசான தங்கும் விடுதிகள் என ஆன்லைனில் பதிவிட்டுள்ளதைப் பார்த்து, அதன் உண்மை தன்மையை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் அறைகளைப் பதிவு செய்து விடுகின்றனர். அப்படி அறையை முன்பதிவு செய்துவிட்டு, மூணாறு வருபவர்கள், விழி பிதுங்கி நிற்கிறார்கள். 

resort


மூணாறுக்கும், தாங்கள் பதிவு செய்துள்ள விடுதிக்கும் சுமார் 50 முதல் 60 கிலோ மீட்டர் தூரம் இருப்பது அவர்களை பேரதிர்ச்சிக்கு ஆளக்குகிறது. அழகிய மலைகளையும், இயற்கை எழிலையையும் கண்டுகளிக்க நீண்ட தொலைவில் இருந்து வரும் சுற்றுலாப்பயணிகள், மூணாறுக்கு கொஞ்சமும் சம்பந்த்மேயில்லாத ஏதோ ஒரு இடத்தில் அறை எடுத்து தங்கும் அவஸ்தை அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தருவதுடன் மனஉளைச்சலையும் ஏற்படுத்தி வருகிறது! இப்படி சுற்றுலா பயணிகளை வலை விரித்து வலைத்தளங்களில் ஏமாற்றும் சொகுசு விடுதிகள், அழகழகான மூணாறின் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவிட்டு ஏமாற்றுகின்றன. இந்தப் புகைப்படங்களை இணையதளங்களில் பார்த்து விட்டு, அந்த விடுதிகளிலேயே தங்குவதற்கு முன்பதிவு செய்து விடுகின்றனர். இதில், வருத்தம் என்னவென்றால் தங்கியிருக்கும் இடமே மூணாறு என நம்பி, ஒரிஜினல் மூணாறை பார்க்காமலேயே பெரும்பாலான சுற்றுலாப்பயணிகள் திரும்பிச் சென்ற கதையும் உண்டு. மூணாறு பகுதிக்கு உட்படாத குறிப்பிட்ட பகுதியின் பெயர்களை சிறிய எழுத்திலும், மூணாறை பெரிய எழுத்திலும் பொறித்துள்ள தனியார் விடுதிகள் மற்றும் கடைகள் மீது உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

admin Sat, 09/14/2019 - 12:15
Kerala's Munnar Online hotel booking travel tips online hotel booking லைப்ஸ்டைல் சுற்றுலா

English Title

becareful while booking online hotels

News Order

0

Ticker

0 ஆர்ச்சைத் தாண்டி பேரன்பின் ஆதி ஊற்று, குற்றாலத்தில் குளிக்கத் தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது பெய்துவரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம்... இல்லையில்லை தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. குற்றால மெயின் அருவியில் பேரன்பின் ஆதி ஊற்று ஆர்ச்சைத் தாண்டி கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Kutralam Falls

சீசன் களைகட்டியுள்ளதால், ஏற்கெனவே ரேஷன் கடையில் 2000 ரூபாய் நிவாரணம் வாங்க காத்திருந்தோர் மாதிரி குளிக்க நேற்று க்யூ கட்டி நின்றுகொண்டிருந்தார்கள். இன்று அதற்கும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது. குற்றாலத்திற்கு சுற்றுலா ப்ளான் வைத்திருப்பவர்கள் கவனத்தில் கொள்க‌.

gunaseelan Fri, 07/19/2019 - 09:55
Floods in Kutralam Showers not allowed southwest monsoon Floods in Kutralam சுற்றுலா தமிழகம்

English Title

Floods in Kutralam, No showers allowed

News Order

0

Ticker

1 
Saravanan

ஒற்றை மனிதன் 100 ஏக்கர் காடு, 30 வருடங்கள். எல்லாப் புகழும் சரவணனனுக்கே!

ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வகை மரங்கள், மாங்குயில், மயில், கொண்டாலத்தி, புறாக்கள், மேலும் பாம்பு உள்ளிட்ட வன‌விலங்குகளும் ஆதார் தேவைப்படாமல் ஆனந்தமாய் இவ்வனத்தில் குடியிருக்கின்றன.


Shimla

சாரி மோடிஜி, சிம்லா ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடியாச்சு!

ஐந்தாண்டுகள் முடிவில் "யோவ் அமைச்சரே, எங்கய்யா இங்க இருக்க வேண்டிய சிம்லா ஸ்மார்ட் சிட்டி?" என்று மோடி கேட்டால், "சாரி சார் ஸ்மார்ட் சிட்டி ரெடியாகலை, ரோபோ சிட்டி பொம்மைதான் ரெடி ப...


Plastic bottles

நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு ஆகஸ்ட் 15 முதல் தடை. கவனம்!

நெடுஞ்சாலை ஓரங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் கடைகள், இந்தப் பொருட்களை விற்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை சுற்றுலாப் பயணிகளும் கொண்டு வரக் கூடாது எ...

பஸ்லயே பர்மா போகலாம் தெரியுமா?

இந்தியாவில் இருந்து பங்களாதேஷ், பூட்டான், நேப்பாள்,பாக்கிஸ்தான் போற மாதிரியே பர்மாவுக்கும் பஸ்ஸுலயே போகலாம்.சிங்கப்பூர்,மலேஷியாவோட ஒப்பிட்டா காசும் மிச்சம்,விசா ஆன் அரைவல் வசதி இருக்கறதால நினச்ச உடனே கிளம்பலாம்.

myanmar

கொஞ்சம் பணமும் நிறைய நேரமும் இருந்தால் போதும்.முதல்ல நீங்க செய்ய வேண்டியது மூட்டை முடிச்சுக்களை கட்டிக்கிட்டு மணிப்பூர் மாநில தலைநகர் இம்பால் போங்க.அங்க இருந்து ஒரு டாக்சி பிடிச்சுக்கிட்டு பர்மா பார்டர்ல இருக்கற மோராங்கற ஊர்ல போய் இறங்கனும்.ஆக்சுவலா அது ஒரு இரட்டை கிராமம்,நம்ம சைடு ஊர் மோரா,பார்டர கிராஸ் பண்ணுனா டாமு.ரெண்டு ஊர்லயுமே நிறைய தமிழ் முகங்கள பார்க்கலாம்,இட்லி தோசைலாங்கூட கிடைக்கும்.

mynamat tenple

டாமுல இருந்து,அடுத்த பெரிய நகரமான மண்டாலேக்கு நிறைய பஸ் இருக்கு.இது பர்மாவுல யங்கூன் (ரங்கூன்) நகரத்துக்கு அடுத்த பெரிய ஊர் இதுதானாம்.இது பர்மாவோட கலாச்சார தலை நகரம்,நமக்கு மதுரை மாதிரி.ஆனா எந்தப் பரபரப்பும் இல்லாத அமைதியோ அமைதியான ஊர்.


என்னென்ன பாக்கலாம் தெரியுமா? மண்டாலேல அதே பேர்ல ஒரு மலை இருக்கு 790 அடி உயர குட்டி மலை.அதுல ஒரு புத்தர் கோவில் இருக்கு,பர்மீஸ் புத்திஸ்டுகளோட முக்கியமான வழிபாட்டு தலம் இது. அடுத்தது, ஸ்வனண்டா மடாலயம்.உண்மையில இது ஒரு பழைய அரண்மனை. கடைசியாக பர்மாவை ஆண்ட மன்னன் தன் தந்தை நினைவாக கட்டுனது.

mynamar


அங்கிருந்து 180 கி.மீ போனால்  'பேகன்!'. இங்கிருந்து இன்னும் 800 கி.மீட்டர் போனால்த்தான் யங்கூன் வரும். அதுக்கு முந்தி இந்த பேகன பாருங்க.இது 13- வது நூற்றாண்டுல பர்மாவ ஆண்ட பேகன் வம்சத்தோட தலைநகரமா இருந்த ஊர்.அந்த மண்ணுல கால வச்ச உடனே இந்த பழமையை  நீங்க உணரலாம்.2000 புத்த மடாலயங்கள்,மண்டபங்கள்,விகாரைகள்னு எங்க பாத்தாலும் கோவில் ,கோவில் கோவில்தான்.

temple

முக்கிய கோவில்கள்... ஆனந்தா கோவில்,ஸ்வீஜியன் கோபுரம்,தத்பியான்னியூ கோவில்,தம்மயாங்யி கோவில்,சுலமானி இந்தக் கோயில்லாம் , அது அமைந்திருக்கின்ற  இடத்தாலயும்,அந்த கோவில்ல இருக்கற சிற்ப வேலைப்பாட்டலயும் ரொம்ப ஃபேமஸ்.

temple


அடுத்தது நம்ம இலக்கான யங்கூன்.சிங்கப்பூர் ,மலேயா மாதிரி 1930-ல்லேயே பத்துலட்சம் தமிழர்கள் வாழ்ந்த ஊர். சுலே பகோடாங்கற கோவிலை சுத்தித்தான் யங்கூன் ஊரே அமஞ்சிருக்கு.எங்க பாத்தாலும் பிரிட்டிஷ் காலணியாதிக்கத்தோட அடையாளமா பெரிய பெரிய காரைக் கட்டிடங்கள பாக்கலாம்.மாரியம்மன் கோவில் , முருகன் கோவிலும் பார்க்கலாம்.


இங்க என்னெல்லாம் பாக்கனும் தெரியுமா? மொதல்ல ஸ்வேடாகன் புத்தவிகாரை , பர்மாவிலேயே இதுதான் ரொம்ப புனிதமான கோவிலாம்.கெளதம புத்தரோட தலை முடிய இங்க பாதுகாத்து வச்சிருக்காங்க!

rangoon railway station

ரங்கூன் ரயில் நிலையம் இருக்கற ஏரியாவுல நம்ம ஊர் காசுக்கு 600 ரேஞ்சுல சிங்கிள் ரூம் கிடைக்கும். ரங்கூன சிம்பிளா சுத்திப்பாக ஈசி வழி நம்மள மாதிரி ஆளுங்களுகாகவே அவங்க விட்டு இருக்கற சர்குலர் ட்ரெயின புடிக்கறதுதான்.ஒரு டாலர்தான்  டிக்கெட்,அது ரங்கூன் ஊர சுத்தி இருக்கற கிராமங்கள் வழியா போக,நாம உள்ளூர் மக்களோட அன்றாட வாழ்க்கை எப்படி நடக்குதுனு தெரிஞ்சுக்கலாம்.வேணும்னா  ஒரு இடத்துல இறங்கி பொறுமையா சுத்திப்பாத்துட்டு பின்னாடியே வர்ற அடுத்த ரயில்ல ஏரிக்கலாம் .அதே டிக்கெட்தான். உணவும் நீங்க சென்னையிலயே பாக்கற அத்தோ,மொய்ஞோதான்.சைவர்களுக்கும் பஞ்சமில்லை நிறைய தமிழர் உணவகங்கள் இருக்கின்றன.

admin Sat, 06/01/2019 - 12:50
mynamar tour travel பர்மா சுற்றுலா லைப்ஸ்டைல்

English Title

the tour trvel about burma

News Order

0

Ticker

0 
குன்னூர் சிம்ஸ் பூங்கா

குன்னூரில் கோடை கொண்டாட்டம்: சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் ஆரம்பமான பழக் கண்காட்சி!

61வது பழக்கண்காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு சிம்ஸ் பூங்காவில் இன்று முதல் தொடங்கியுள்ளது. கோப்புப்படம்

கோவாவுல பீர் ரேட்டே கம்மி தான்; இப்போ ஓசியாவும் குடிக்கலாம்-எப்படி தெரியுமா?!

விடிய விடிய நடக்கும் பார்ட்டிகள், மசாஜ்கள், சுதந்திரமான கலாசாரம் என பல்வேறு நினைவுகள் நமது நினைவுக்கு வந்தாலும், சட்டென முதலில் நமது நினைவுக்கு வருவது குடி...குடி...குடி....தான்


அனகொண்டா பாம்பு

அனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்!  

தேர்தல் வந்ததால் பல பேர் சம்மர் லீவுக்கு சுற்றுலா போகும் திட்டத்தை தள்ளி வைத்திருப்பீர்கள். இப்போது உங்களுக்கு இருக்கிற பிரச்சினையே இந்த சம்மருக்கு எங்கே போகலாம் என்பதாகத்தான் இருக...

தெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை!

1) இந்திய நகரங்களிலேயே முதல் உலகப் போரில் தாக்குதலை சந்தித்த ஒரே நகரம் சென்னைதான்.ஜெர்மானிய போர்கப்பலான எம்டன் 1914 செப்டம்பர் 22-ம் தேதி இரவு சென்னை துறைமுகம் பகுதியில் குண்டு வீசியது.பெரிய சேதமேதும் இல்லாவிட்டாலும் பிரிட்டிஷ் பெருமையை தரைமட்டமாக்கிவிட்டது எம்டன்.

சென்னை துறைமுகம்

2) ராயபுரம் ரயில் நிலையம் 1856 ஜூலை மாதம் முதல்தேதி முதல் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.இந்தியாவிலேயே பழைமையான ரயில் நிலையம் இதுதான்.1873-ல் இன்றைய எம்.ஜி.ஆர் சென்டிரல் ஸ்டேஷன் திறக்கப்படும் வரை சென்னையில் இருந்த ஒரே ரயில் நிலையம் ராயபுரம் மட்டும்தான். சென்டிரல் ஸ்டேஷனை விட ராயபுரம் ரயில் நிலையம் 17 ஆண்டுகள் மூத்தது.

ராயபுரம் ரயில் நிலையம்

3) கன்னிமாரா நூலகம்,இது வெறும் நூலகமல்ல நேஷனல் டிபோசிடரி. இந்தியாவில் இயங்கும் நான்கு டிபோசிடரிகளில் இது ஒன்று.இந்தியாவில் பிரசுரமாகும் புத்தகங்கள் பத்திரிகைகள்,செய்திதாள்கள் அனைத்தும் இங்கே அனுப்பி வைக்கபடுவது கட்டாயம்.இது ஐக்கிய நாடுகள் சபையின் நூலகமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கன்னிமாரா நூலகம்

4) அடையாறு ஆலமரம். 450 ஆண்டுகளாக இந்த ஆலமரம் நின்றுகொண்டு இருக்கிறது.நூற்றுக்கணக்கான புயல்கள் தாக்கியும் இதை முற்றாக அழிக்க முடியவில்லை.சென்னை தியாசஃபிக்கல் சொசைட்டி வளாகத்தில் இருக்கும் இந்த மரம் 40 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பரவி நிற்கிறது.இதன் நிழலில் ஒருமுறையாவது இளைப்பாராத இந்தியத் தலைவர்கள் யாருமே இல்லை என்று சொல்லலாம்

அடையாறு ஆலமரம்

5) சென்னை மாநகராட்சி.இதுதான் உலகின் இரண்டாவது பழைமையான முனிசிபல் கார்ப்பரேஷன் ( முதலிடம் லண்டனுக்கு).1687 டிசம்பர் 30ம் தேதி அன்றைய பிரிட்டிஷ் அரசர் இரண்டாவது ஜேம்ஸ் வெளியிட்ட உத்தரவின்படி 1688 செப்டம்பர் 29 ம்தேதி சென்னை கார்பரேஷன் தோற்றுவிக்கப்பட்டது. அதாவது 330 வயதாகிறது சென்னை மாநகராட்சிக்கு.

சென்னை மாநகராட்சி

6) உலகிலேயே சிறந்த உணவு வழங்கும் இரண்டவது நகரமாக சென்னையை தேர்ந்தெடுத்திருக்கிறது,நேஷனல் ஜியாகிரபிக் சேனல்.அந்தப்  பட்டியலில் இடம் பிடித்த ஒரே இந்திய நகரமும் சென்னைதான்.லோன்லி ப்ளானட் வெளியிட்ட உலகின் சிறந்த காஸ்மோபாலிட்டன் நகரங்களில் 9 இடத்தை பிடித்திருக்கிறது சென்னை.

சென்னை அண்ணா சாலை

7) அடையாறு புற்றுநோய் மருத்துவமனை.இதுதான் இந்தியாவின் முதல் புற்றுநோய் மருத்துவமனை.இதை உருவாக்கிய டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிதான் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்.இங்கே உருவான (WIA) கேன்சர் இன்ஸ்டிட்யூட் புற்றுநோய் தொடர்பான பல துறைகளில் பயிற்சி அளிக்கிறது.அந்த சான்றிதழ்கள் இந்திய மெடிக்கல் கவுன்சில் அங்கீகாரம் பெற்றவை.

கேன்ஸர் இன்ஸ்ட்யூட்

8) அறிஞர் அண்ணா வனவிலங்கு காப்பகம். இப்போது சென்னை வண்டலூரில் இயங்கும் இந்த காப்பகம் துவங்கப்பட்ட ஆண்டு 1855 ! இந்தியாவின் முதல் வனவிலங்கு காட்சியகம் இதுதான்.துவக்கத்தில் இன்றைய் சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தின் அருகில் துவங்கப்பட்டு 1985 வாக்கில் இப்போது இருக்கும் இடத்திற்கு மாற்றப்பட்டது.இது விலங்குகளுக்கான சரனாலயமாகவும்,புத்துணர்வு மையமாகவும் செயல்படுகிறது.

வண்டலூர் மிருகக்காட்சி

9) கத்திப்பாரா மேம்பாலம்.க்ளோவர் லீஃப் என்கிற வகையைச் சேர்ந்த மேம்பாலங்களில்  ஆசியாவிலேயே பெரிய மேம்பாலம் இதுதான்.ஆலந்தூர் சந்திப்பில் அமைந்திருக்கும் இந்தபாலம்  ஜி.எஸ்.டி ரோடு,அண்ணா சாலை,உள்வட்டச்சாலை,மவுண்ட் பூந்தமல்லி சாலை ஆகிய நான்கு சாலைகளை இணைக்கிறது.

கத்திப்பாரா நூலகம்

10) மெட்ராஸ் ஹைகோர்ட்

உலகின் பெரிய நீதிமன்ற வளாகங்களில் ஒன்று.இதன் பரப்பளவு 107 ஏக்கர்.அதாவது 42 லட்சத்து 80 ஆயிரம் சதுர அடி.இங்கிலாந்து ராணி விக்டோரியாவின் அறிவிப்பின்படி,1862 ஜூன் 28-ம் தேதி பிறந்தது சென்னை உயர் நீதிமன்றம்.இதன் பிரதானக் கட்டிடத்தின் உச்சியில்தான் சென்னையின் இரண்டாவது கலங்கரை விளக்கு அமைக்கபட்டு இருந்தது என்பது இன்னொரு உபரி பெருமை.

சென்னை உயர் நீதிமன்றம்

 


 

admin Tue, 04/23/2019 - 12:23
சென்னையின் வரலாறு வரலாற்று தகவல் சுற்றுலா chennai fact known and unknown fact சென்னை சுற்றுலா

English Title

chennai known and unknown fact

News Order

0

Ticker

0 
கோப்புப்படம்

கொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க

மலைகள்,பள்ளத்தாக்குகள், அருவிகள்,காடுகள், நீர்ச்சுனைகள் என அனைத்தும் ஒருசேர அமைந்திருக்கும் இடம் இது.ஆனால்,மழைக்காலங்களிலும் மழைக்கு பிந்திய காலங்களிலும் மிக அழகாக காட்சியளிக்கும்

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு ‘மற்றது’ அத்தனையும் ஞாபகத்துக்கு வருதுல்ல...இதப்பத்தி எதாவது தெரியுமா..!

பாண்டிச்சேரி என்றால் உங்களுக்கு நாக்கில் எச்சில் ஊரும்...விதவிதமான சரக்குகள் எல்லாம் வந்து போகும்! அதைத்தாண்டியும் சில அட்ராக்சன் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.ஆனால்,எப்போதாவது பாண்டிச்சேரி எல்லைக்குள் நுழையும் போது,கிரேக்க கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கபட்ட ஒரு அழகிய வெண்மை நிற நினைவிடம் இருப்பதை கவனிசிருக்கீங்களா?! 

alcohol

பாண்டிச்சேரிக்குள் இருக்கும் பாரதி பூங்காவில் அந்த நினைவிடத்தின் உண்மையான வடிவத்தைப் பார்க்கலாம்.அந்த நினைவிடத்துக்கு பெயர் ஆயி மண்டபம்.ஆயி என்பவள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் வாழ்ந்த பணக்கார தாசி! அவளின் ஞாபகார்த்தமாகத்தான் இன்றைக்கும் கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது இந்த நினைவிடம்.

என்னது தாசிக்கு நினைவிடமா என்று ஆச்சர்யமும்,குழப்பமும் வருதா?இந்த வரலாற்று நிகழ்வுக்கு பின்னால்,ஒரு தாசி பெண்ணின் மிகப் பெரிய தியாகமும், மன்னனின் முட்டாள்தனமும் அடங்கியிருப்பதைத் தெரிந்து கொள்ள,ஒரு சின்ன ஃபிளாஷ் பேக் போகலாம்.

krishnathevarayar

கிருஷ்ண தேவராயர் தென்னிந்திய நிலப்பரப்பில் பெரும்  பகுதியை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. தன்,ராஜ்ஜியத்தைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்ட மன்னர்,வேலூரைப் பார்த்துவிட்டுப்,புதுவை உழவர்கரையில் உள்ள தனது ஆதரவாளர்,உய்யக்கொண்ட விசுவராயரைப் பார்க்க புறப்பட்டார்.

வழியில் முத்தரையர் பாளையம் என்கிற ஊரின் அருகில் வரும்போது விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த  ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்ததும் கோவில் என்று நினைத்து கும்பிட்டார்.இதைப்பார்த்த உள்ளூ ஆள் ஒருத்தர், அரசரிடம்,நீங்கள் வணங்கியது ஆலயமல்ல,அது ஆயி என்கிற தாசியின் இல்லம்,என்று சொல்ல அரசருக்கு கோபம்,அவமானம்...உடனே அந்தக் கட்டிட்டத்தை இடிக்க உத்தரவு பிறப்பித்தார்.

pondicherry

இது கேட்டு,ஓடிவந்த ஆயி எத்தனை கெஞ்சிக்கேட்டும் கிருஷ்ண தேவராயர் மனம் இரங்கவில்லை.கடைசியில் தான் கட்டிய மாளிகையை தானே இடிப்பதாக ஆயி கேட்டுக்கொள்கிறாள்.இதற்கு மட்டும் அரசனின் ஒப்புதல் கிடைக்கிறது. தான் கட்டிய மாளிகையை தானே இடித்த ஆயி,அந்த இடத்தில் பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்காக ஒரு ஏரியை உருவாக்கினாள்.

புதுவையில் 18ம் நூற்றாண்டில் பிரஞ்சுக் காலணி ஏற்பட்டபோது,அவர்களின் வசிப்பிடங்கள் கடற்கரை அருகில் அமைந்ததால் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. புதுச்சேர் கவர்னர் ஃபிரான்சின் அன்றைய அரசன்,மூன்றாம் லூயியிடம் முறையிட, அவர் லா மைரஸ்ஸே என்கிற பொறியாளரை அனுப்பி வைத்தார். 

pondi

புதுவை வந்த லா மைரஸ்ஸே,சுற்றுப்புற பகுதிகளை ஆய்வு செய்து,ஆயி வெட்டி வைத்த ஏரிதான் பிரட்சினைக்கு ஒரே தீர்வு என்று முடிவு செய்து,அந்த ஏரியிலிருந்து இன்றைய பாரதி பூங்கா வரை ஒரு கால்வாய் வெட்டி புதுவைக்கு நீர் கொண்டு வந்தான்.ஆட்சியாளர்களும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ayi

பிரஞ்சு அரசருக்கு கவர்னர் எழுதிய நன்றிக்கடிதத்தில் ஆயி செய்த தியாகம் குறித்து விவரமாக எழுதினார்.இதையறிந்து வியந்த ஃபிரஞ்ச் அரசன் மூன்றாம் லூயி நகரின் மத்தியில்,ஆயி நினைவிடம் அமைக்க உத்தரவிட்டார்.அப்படி அமைக்கப்பட்ட ஆயிமண்டபத்தைச் சுற்றி பிற்காலத்தில் பாரதி பூங்கா அமைந்தது.அந்த மண்டபத்தின் மாதிரியை பிற்கால புதுவை அரசு தனது எல்லைகள் தோறும் அமைத்தது.இதனால்,ஒரு முட்டாள் அரசனின் அறியாமையால் தண்டிக்கப்பட்ட ஆயியின் நினைவு நூற்றாண்டுகள் கடந்தும் புதுவை மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.

இதையும் படிங்க: மீன் பிரியர்கள் நாளைக்கே நல்லா சாப்பிட்டுக்கோங்கோ...இதுக்கு அப்புறம் அவ்வளவு தான்!

manikkodimohan Sat, 04/13/2019 - 10:58
Places Pondicherry aayi mandapam history travel tourism பாண்டிச்சேரி சுற்றுலா லைப்ஸ்டைல்

English Title

pondicherry aayi mandapam history

News Order

0

Ticker

0 பட்டயாவுக்கு போயிருக்கிங்களா ? அடுத்தமுறை போனால் ‘பிங்பாங் பாங்காக்’கேமை மிஸ் பண்ணிறாதீங்க !

பாங்காக் என்கிற சொல்லுக்கு என்ன அர்த்தம் தெரியுமா?.அது பாங்காக்கின், டான் முவாங் விமான நிலையத்தில் இறங்கியதுமே உங்களுக்கு அந்தச் சொல்லுக்கு பொருள் புரிந்துவிடும்.

thailand

முகத்தில் நிரந்தரமாக படிந்த வெட்கச் சிரிப்பும்,குறுகுறு பார்வை, கொப்பளிக்கும் இளமையோடு வெவ்வேறு உயரங்களில்,தோற்றங்களில் வார்த்தெடுத்த சிலைகள் போல் திரும்பிய பக்கமெல்லாம் பெண்கள்,பெண்கள்,பெண்கள்! 

thailand

தாய்லாந்து அழகான பெண்களால் ஆன நாடு அது. பாங்காக் என்ற சொல்லுக்கு சயாமிய மொழியில் ‘தேவதைகளின் நகரம்’ என்று அர்த்தமாம்! அதுவும் மங்கிய மாலைநேரத்தில் வாக்கிங் ஸ்ட்ரீட்டில் நடந்து பாருங்கள் புரியும்… இந்த நாட்டுக்கு பெயர் வைத்தவன் ஆகப் பெரும் கவிஞனாக இருக்கவேண்டும்.

thailand

இருபத்து நான்கு மணிநேரமும் விழித்திருக்கும், இருபத்து நாலுமணி நேரமும் கெட்டகாரியம் செய்து கொண்டும்,கெட்டகாரியம் செய்ய அழைத்துக் கொண்டும் இருக்கும் உல்லாச உலகம் பாங்காக். இந்தியா போன்ற செக்ஸ் வறட்சி நிலவும் நாட்டிலிருந்து போகும் நீங்கள் எவ்வளவு நவீனமான ஆளாக இருந்தாலும் முதல் பார்வையிலேயே உங்களுக்கு அதிர்ச்சி அளித்துவிடும் பாங்காக்.

thailand

புலர்காலை நேரத்தில் சாலையின் ஒரு பக்கத்தில் புத்தமத துறவிகள் அமைதியாக நடந்து கொண்டிருக்க,மறுபுறம் காலையிலேயே நன்றாக சுதியேற்றிக்கொண்ட எவனோ ஒரு வெள்ளைக் கிழவன், இரண்டு கைநிறய அழகிகளை அள்ளிக்கொண்டு போவதைப் பார்க்கலாம்.

இதை  நீங்கள் பார்க்கிற பார்வையை வைத்தே உங்கள் டாக்சி டிரைவர், மசாஜ் பார்லருக்கு அழைப்பான். அதிகாலையில் நைட்கிளப் மூடியதும் அங்கே மசாஜ் பார்லர்களை திறந்து விடுகிறார்கள். பெயர்கள்தான் வெவ்வேறு; நடக்கிற காரியங்கள் ஒன்றுதான். வழியெல்லாம் நைட் கிளப்களும், மசாஜ் பார்லர்களும் தான்.

thailand

அதுவும் எத்தனை ரகரகமான மசாஜ்கள். ஆயில் மசாஜ் முதல் அந்த ஊர் சாண்ட்விச் மசாஜ் வரை அத்தனை ரகங்கள். பிங்பாங் என்றொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கிறது. முயன்று பாருங்கள். பாலியல் தொழிலும், நைட் கிளப்புகளும், மசாஜ் பார்லர்களும் உலகெங்கும் இருப்பதுதான். ஆனால் தாய்லாந்தில் நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குவது அதன் அதீதம். எல்லாம் எல்லை தாண்டிய கற்பனைகள். அதில் உச்சம் இந்த பிங்பாங்.

thailand

சாதாரண டேபிள் டென்னிஸ் தான், ஆனால் உங்களுக்கு மட்டுமே பேட் தரப்படும். நீங்கள் ஒரு சோபாவில் அமர்ந்து கொண்டே பந்தைத் தட்டலாம்.எதிரில் ஒரு சிறிய மேடை மேல் வில்போல் வளைந்து,வெறும் ப்ரா, ஜட்டி மட்டும் அணிந்த பெண் உங்கள் பந்தை எதிர் கொள்ளத் தயாராக இருப்பாள்.

அவளுக்கு அவளது இடுப்புதான் பேட். நீங்கள் பந்தை அடித்ததும் அவள் தன் இடையை அசைத்து அந்தப் பந்தை லாவகமாக உங்களிடம் அதே வேகத்தோடு திருப்பிஅனுப்புவாள். அவள் ‘பேட்டால்’ அடிக்கிற விதத்தை பார்த்து கொண்டே நீங்கள் பந்தை கோட்டை விட்டால், அவள் மாறாத புன்னகையுடன் அடுத்த பந்தை எதிர் கொள்ளத் தயாராவாள்.

இந்த பிங்பாங் பாங்காக், பட்டாயா என்று எல்லா இடத்திலும் இருந்தாலும், புக்கிட் தீவின் பங்களா ரோட்டில்தான் ஸ்பெஷல் பிளேயர்கள் இருக்கிறார்கள். பந்து வேண்டாம் என்றால் வேறு பல மாற்று உபகரணங்கள் வேறு உண்டாம். இதற்கு தனியாக கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை, ஒன்றுக்கு நான்கு பங்கு விலையில் அவர்கள் தரும் காக்டெய்ல், அல்லது பீரில் எல்லாம் அடக்கம்.

thailand

இதே போல, இன்னொரு அதீதம் தாய்லாந்தில் இருக்கும் ஹேண்ட்ஸ் ஃபிரீ ரெஸ்டாரெண்ட்கள். நீங்கள் போய் அமர்ந்ததும் இரண்டு மகா சிக்கன அழகிகள் வந்து உங்களின் இருபுறமும் அமர்ந்து கொள்வார்கள். நீங்கள் ஆர்டர் செய்த உணவை அவர்களே எடுத்து உங்களுக்கு ஊட்டி விட! நீங்கள் ஸ்பூனையும் ,ஃபோர்க்கையும் கைகளால் தொடவே வேண்டாம். அவற்றுக்கு நீங்கள் விரும்பினால், வேறு சுவாரசியமான வேலை தரலாம். 

இது போலவே நோஹேண்ட் பார்களும் உண்டு! பாங்காக்கின் சை ப்ரேயா, பகுதியில் இருக்கும் நான்காம் ராமன் சாலை இந்த வசதிகளை வாரி வழங்குகிறது.

நீங்களும்,உங்கள் வங்கிக் கணக்கும் அரோக்கியமாக இருந்தால் போதும்,நீங்கள் கற்பனைக்கெட்டாத உலகை தரிசிக்கலாம் தாய்லாந்தில்.

இதையும் வாசிங்க

அழகும், சரித்திரமும் கூறும் பிரான்ஸ்!!

smprabu Tue, 04/09/2019 - 13:37
ping pong game bangkok thailand கோப்புப்படம் சுற்றுலா உலக டூர் லைப்ஸ்டைல் உலகம்

English Title

Dont miss this ping pong bangkok game in thailand

News Order

0

Ticker

0 
2018 TopTamilNews. All rights reserved.