“பட்டினியால் சாவதை விட ,பத்தினி இல்லை என வாழ்கிறோம்”-மாஸ்க் அணிந்து தொழிலை ஆரம்பித்த பாலியல் தொழிலாளிகள்..

“பட்டினியால் சாவதை விட ,பத்தினி இல்லை என வாழ்கிறோம்”-மாஸ்க் அணிந்து தொழிலை ஆரம்பித்த பாலியல் தொழிலாளிகள்..

இந்த ஐந்து மாதங்களாக நடைபெறும் ஊரடங்கால் மிகவும் பாதிக்கப்பட்டது பாலியல் தொழிலாளர்கள்தான் என்றால் அது மிகையாகாது .இப்போது அவர்கள் வைரஸை சமாளிக்க மாஸ்க் அணிந்து கொண்டு தொழிலை ஆரம்பித்து விட்டார்கள்.

“பட்டினியால் சாவதை விட ,பத்தினி இல்லை என வாழ்கிறோம்”-மாஸ்க் அணிந்து தொழிலை ஆரம்பித்த பாலியல் தொழிலாளிகள்..

ஹைதராபாத்தில் பல வருடங்களாக பாலியல் தொழில் செய்து வரும் பல பெண்களின் குழந்தைகள் தினமும் ஒரு வேலை உணவோடு தான் கடந்த ஐந்து மாதங்களாக உறங்க போகிறார்கள் .மேலும் அவர்களின் குழந்தைகளுக்கு இப்போது ஆன்லைனில் படிக்க பள்ளிகளுக்கு பணம் கட்ட பணமில்லாததால் அவர்கள் படிக்க முடியாமல் இருக்கிறார்கள் .இதனால் பாதிக்கப்பட்ட சமா என்று ஒரு பாலியல் தொழிலாளி கூறுகையில் ,இந்த ஹைதராபாத்தில் தன்னை போல பல நூறு பாலியல் பெண்களின் வாழ்க்கை கடந்த ஐந்து மாதங்களாக கடும் சோதனையில் உள்ளதாகவும் ,வாடிக்கையாளர்கள் வைரசுக்கு பயந்து வராததால் தங்கள் குடும்பங்கள் ஒரு வேலை உணவோடுதான் உயிர் வாழ்வதாகவும் ,தங்களின் குழந்தைகளுக்கு ஆன்லைனில் படிக்க செல்போன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்க முடியவில்லையென்றும் ,ரேஷனில் அரிசி வாங்கி காலம் கழிக்கிறோமென்றும் ,இப்போது ஹோட்டல்களுக்கு அழைப்புகள் வருவதாகவும் ,அப்போது தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களை வெப்ப பரிசோதனை செய்தும் ,மாஸ்க் அணிந்தும் ,செனிடைசர் கொண்டு கை கழுவியதும்தான் தங்களோடு தொடர்பு கொள்ள அனுமதிப்பதாக கூறினார் .

“பட்டினியால் சாவதை விட ,பத்தினி இல்லை என வாழ்கிறோம்”-மாஸ்க் அணிந்து தொழிலை ஆரம்பித்த பாலியல் தொழிலாளிகள்..