வேகமெடுக்கும் புதிய கொரோனா பரவல்: மொத்த கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

 

வேகமெடுக்கும் புதிய கொரோனா பரவல்: மொத்த கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் தற்போது வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. அங்கிருந்து வந்தவர்கள் மூலமாக இந்தியாவில் இதுவரை 38 பேருக்கு அந்த கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. இந்த வைரஸ் மேலும் பரவாத வண்ணம், தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதிய வகை கொரோனா வைரஸால் மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பினும், அது 70% வேகமாக பரவும் தன்மைக் கொண்டது என்று கூறப்படுவது மக்கள் மத்தியில் அச்சத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

வேகமெடுக்கும் புதிய கொரோனா பரவல்: மொத்த கொரோனா பாதிப்பு விவரம் இதோ!

இந்த நிலையில், இந்தியாவின் கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,03,56,845 ஆக அதிகரித்துள்ளதாகவும் ஒரே நாளில் 201 பேர் உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,49,850 ஆக அதிகரித்துள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதுவரை 99,75,958 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கும் நிலையில் 2,31,036 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.