முதல்வரின் அறிவிப்பை அன்றே கணித்த டாப் தமிழ் நியூஸ்!

 

முதல்வரின் அறிவிப்பை அன்றே கணித்த டாப் தமிழ் நியூஸ்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவிருப்பதையடுத்து பிரச்சாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். 10 ஆண்டுகளுக்கு பின் எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டுமென திமுகவும், மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்கவேண்டுமென அதிமுகவும் முனைப்புக்காட்டி வருகிறது. ஸ்டாலின் தான் வராறு… விடியல் தர போராறு என திமுகவும், வெற்றி நடை போடும் தமிழகமே என முதல்வர் எடப்பாடி பழனிசாமி பட்டித்தொட்டியெல்லாம் பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர்.

முதல்வரின் அறிவிப்பை அன்றே கணித்த டாப் தமிழ் நியூஸ்!

இதுஒருபுறம் இருக்க ஆட்சிக்கு வந்தவுடன் பயிர்க்கடன், நகைக்கடன், கல்விக்கடன் உள்ளிட்டவை தள்ளுப்படி செய்யப்படும் என திமுக ஸ்டாலின் அறிவித்த அடுத்த சில நாட்களில் கூட்டுறவு பயிர்க்கடன், விவசாயிகளின் நகைக்கடன் ரத்து செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட திட்டங்களை முதல்வர் பழனிசாமி அதிகாரப்பூர்வமாக சட்டப்பேரவையில் அறிவிக்கும் முன்னரே நமது டாப் தமிழ் நியூஸ் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தது.

இதேபோல் விலையுயர்வு கண்டுவரும் சிலிண்டர் விலையால் அவதிக்குள்ளாகியுள்ள இல்லதரசிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அறிவிப்பு விரைவில் வெளிவரும் என கடந்தமாத தொடக்கத்திலேயே நமது டாப் தமிழ் நியூஸ் தளத்தில் செய்தியாக பதிவிட்டிருந்தோம். அதன்படி, ஆண்டுக்கு 6 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும் மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு ரூ.1,500 வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

மேலும் படிக்க…. “அடுத்த டார்க்கெட் இல்லத்தரசிகள்” : இன்ப அதிர்ச்சி கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

https://www.toptamilnews.com/cm-edappadi-palanisamy-next-announcement-for-home-makers/