முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள்!

 

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள்!

அரசு நகரப்பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணச்சலுகை அளித்ததுபோலவே, திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் இலவச பயண சலுகை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 98 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரின் பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் இன்று 38 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டன. அத்துடன் இரண்டாவது தவணையாக நிவாரணத் தொகை ரூபாய் 2000 , 14 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.அந்த வகையில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டுள்ளார்.

1. தென்சென்னையில் ரூபாய் 250 கோடி மதிப்பீட்டில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று கட்டப்படும் . சென்னை பெருநகரத்தின் இன்ஸ்டியூட் வளாகத்தில் 250 கோடி ரூபாய் செலவில் 500 படுக்கை வசதிகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்று அளிக்கப்படும் என்று அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள்!

2.இரண்டாவதாக சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும் .

3.இயல் இசை நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது .அதே போல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கியமாமணி என்ற விருது’ உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என்றும் அவர்களுக்கு பாராட்டு பத்திரம் மற்றும் 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய 6 அறிவிப்புகள்!
  1. ஞானபீடம், சாகித்ய அகடமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள் ,புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருது பெற்றவர்களை வைக்கும் கௌரவிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் மாவட்டத்தில் அல்லது விரும்பும் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு மூலமாக வீடு வழங்கப்படும் .
  2. திருவாரூர் மாவட்டத்தில் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு கிடங்குகள் மற்றும் குளங்கள் அமைத்து தரப்படும்.

6. அடுத்ததாக திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும் . நகர்ப்புற அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணச் சலுகை வழங்க பலரும் கோரிக்கை வைத்த நிலையில் மகளிரை தொடர்ந்து திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகர்ப்புற அரசு பேருந்துகளில் இலவசப் பயணம் இனி மேற்கொள்ளலாம் என்றும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.