ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

 

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

கொரோனா பாதிப்பால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக நாட்டில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தங்களுக்கு என ஒரு வாகனம் அவசியம் என்பதை மக்கள் யோசிக்க தொடங்கி விட்டனர். இதனால் பைக் மற்றும் கார்களின் விற்பனை வெகுவாக உயர்ந்துள்ளது. இரு சக்கர வாகனம் வாங்க விரும்பும் மக்களுக்கு ஜூலை மாதம் 2020 ஒரு நம்பிக்கைக்குரிய ஒன்றாகத் தெரிகிறது. ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகளின் பட்டியல் இங்கே!

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர்

கொரோனா பரவல் காரணமாக இந்த பைக்கின் அறிமுகம் தாமதமாகிக் கொண்டே வந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட இருந்தது. ஏறக்குறைய மூன்று மாத காலதாமதத்திற்குப் பிறகு, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய 160சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. இந்த பைக்கின் டெஸ்ட் டிரைவ் முன்பதிவுகள் தொடங்கியுள்ளது.

ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160 ஆர் பைக் ஒரு ஸ்போர்ட்டி லுக் மற்றும் ஷார்ப்பான வடிவமைப்பை கொண்டுள்ளது. இந்த பைக்கில் 160சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் ஃப்யூல் இன்ஜெக்ஷன் வசதியுடன் இடம்பெற்றுள்ளது. இந்த பைக் 8,500 ஆர்பிஎம்மில் 15 பிஹெச்பி திறன் மற்றும் 6,500 ஆர்பிஎம்மில் 14 என்எம் டார்க்கை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் 5 ஸ்பீட் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 60 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டும் என்று ஹீரோ நிறுவனம் கூறியுள்ளது. இந்த பைக் மாடல் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் சுசுகி ஜிக்சர் 155-க்கு போட்டியாக சந்தையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

ஹோண்டா லிவோ 110 (பிஎஸ்6)

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் லிவோ 110-இன் பிஎஸ்6 வெர்ஷனை இம்மாதம் அறிமுகப்படுத்த உள்ளது. சிடி ட்ரீம் 110-க்குப் பிறகு ஹோண்டாவிலிருந்து 110சிசி வகையில் வரும் இரண்டாவது பிஎஸ்6 பைக் ஆகும்.

சிடி 110 ட்ரீம் பிஎஸ்6 பைக்கில் வரும் அதே என்ஜின் 7,500 ஆர்பிஎம்மில் 8.67 பிஹெச்பி மற்றும் 5,500 ஆர்.பி.எம்மில் 9.30 என்.எம் டார்க் ஆகியவை இந்த பைக்கிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த பைக்கின் என்ஜின் 4-ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வருகிறது. சில வெளிப்புற லுக் மாறுபாடு மற்றும் சில அம்சங்கள் புதுப்பிப்பு ஆகியவற்றை இந்த புதிய லிவோ பைக்கில் எதிர்பார்க்கலாம். சந்தையில் ஹீரோ ஸ்ப்ளெண்டர் ஐஸ்மார்ட், டிவிஎஸ் விக்டர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா 110 எச் கியர் ஆகியவற்றுக்கு போட்டியாக ஹோண்டா லிவோ 110 (பிஎஸ்6) பைக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மற்றும் டிவிஎஸ் விக்டர் 110 (பிஎஸ்6 மாடல்கள்)

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் டிவிஎஸ் ஸ்கூட்டி ஜெஸ்ட் 110 மற்றும் டிவிஎஸ் விக்டர் 110 ஆகிய இருசக்கர வாகனங்களின் பிஎஸ்6 மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த இரண்டு வாகனங்களிலும் ஃப்யூல் இன்ஜெக்ஷன் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த வாகனங்களின் விலை ரூ.5000 முதல் ரூ.7000 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

ராயல் என்ஃபீல்ட் மிடியர் 350

ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் வரிசையில் ‘மிடியர் 350’ புதிய வரவாகும். தண்டர்பேர்ட் 350 மாடலுக்கு மாற்றாக இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 350சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பிஎஸ்6 விதிமுறைகளுக்கு ஏற்ப இந்த பைக்கில் இடம்பிடித்துள்ளது. இதன் விலை எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் ரூ.1.7 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்குக்கு என நிறைய துணை பாகங்கள் கிடைக்கும் வகையில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஜூலை 2020-இல் அறிமுகம் ஆகவிருக்கும் டாப் 5 பைக்குகள்

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (பிஎஸ்6)

முன்னதாகவே ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (பிஎஸ்6) பைக் பற்றி தனது இணையதளத்தில் வரிசைப்படுத்தி உள்ளது. இந்த பைக் மாடலின் விலை பற்றி மட்டும் இதுவரை தகவல் வெளியிடப்படவில்லை. எக்ஸ்பல்ஸ் 200டி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200எஸ் ஆகிய பிஎஸ்6 பைக் மாடல்களின் உடன் இந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 (பிஎஸ்6) வாகனமும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. 8500 ஆர்.பி.எம்மில் 17.8 பி.ஹெச்.பி மற்றும் 4500 ஆர்.பி.எம்மில் 16.4 என்.எம் டார்க் ஆகியவற்றை இந்த பைக் வெளிப்படுத்தும். இந்த பைக்கின் எடை 157 கிலோ ஆகும். முந்தைய பிஎஸ்4 மாடலுடன் ஒப்பிடுகையில் இது 3 கிலோ ஆகும். இந்த பைக்கில் ஆயில்-கூல் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது.