நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

சசிகலா விடுதலையானால், அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் ‘திடும்’ என ஓபிஎஸ் புறப்பட்டு வருவார் என அந்த கட்சியினரே நினைத்திருக்கவில்லை.

நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நீண்ட காலமாக கட்டிக்காத்து வந்த கட்டுக் கோப்பை “யார் முதல்வர் வேட்பாளர்?” என்ற ஒரு கேள்வி மூலம் குட்டிக் கல[க்]கத்தையே ஏற்படுத்தி விட்டார் ஓ.பி.எஸ்.

அக்டோபர் 7ஆம் தேதி “யார் முதல்வர் வேட்பாளர்?” என்கிற பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்போது, மிகப் பெரிய சலசலப்பு ஏற்படலாம்? என்று கூறப்படுகிறது.

நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

ஒருவேளை ஓபிஎஸ் பக்கம் காற்று வீசாது என உறுதியாக தெரிந்தால், அதற்கு முன்னதாக “ராஜினாமா செய்து விடுங்கள். உங்கள் மீது கட்சியிலும், பொது மக்கள் மத்தியிலும் நல்ல இமேஜ் கிடைக்கும். ஆதரவாளர்களுடன் அதிமுகவை கைப்பற்றி விடலாம்”. என்று ஆலோசனை சொல்லப்பட்டிருக்கிறதாம்.

இதற்கிடையே “ஓபிஎஸ் கட்சிக்கு என்ன செய்து விட்டார்..? அவரை கட்சியில் இருந்து நீக்குங்கள்” என ஒரு பிரிவினர் முதல்வர் எடப்பாடியிடம் உணர்ச்சி வசப்பட்டு பேசி வருகிறார்களாம். ஆனால் கட்சியில் ஒருங்கிணைப்பாளராக உள்ளவர் மீது திடு திப்பென முடிவெடுக்க முடியாது என்றும் பேசப்பட்டதாம்.

நாளை செய்தியாளர் சந்திப்பு- ‘ஓபிஎஸ்’சின் முடிவு என்ன?

ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேறினால் பதவி நீக்கம் இருக்கும், அதற்கு முன் எதுவும் செய்யமுடியாது எனபதே தற்போதைய நிலையாக உள்ளது.

வெளியேற்றமா ? பதவி நீக்கமா? என்கிற விவகாரம் பேசப்படும் நிலையில், நாளை செய்தியாளர்களை சந்திப்பதாக ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார். நாளை வரை காத்திருப்பதற்குள், தமிழக அரசியலில் ஓபிஎஸ் என்ன முடிவு எடுக்க உள்ளார் என்பதுதான் சூடான விஷயமாக இருக்கப் போகிறது.

இர.போஸ்