நாளை 2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்!

 

நாளை 2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்!

2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் நாளை (நவம்பர் 30) நிகழவிருக்கிறது. மேலும் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த ஆண்டு, சந்திர கிரகணம் கார்த்திக் பூர்ணிமாவுடன் சேர்ந்து நிகழவுள்ளது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகண நிகழ்வாகும். சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஒரு நேர் கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணைந்திருக்கும்போது இது நிகழ்கிறது. பூமியின் வெளிப்புற நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

நாளை 2020 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்!

இந்தியாவில் இந்த நிகழ்வு நாளை மதியம் 1:04 மணிக்குத் தொடங்கி மாலை 5:22 மணிக்கு முடிவடையவுள்ளது. மாலை 3:13 மணியளவில் சந்திர கிரகணம் உச்சத்தில் இருக்கும் என்றும் இந்த சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என்றும் வானியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, பசிபிக் மற்றும் ஆட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் தெரியும். முன்னதாக கடந்த ஜனவரி 10, ஜூன் 5 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள் நடைபெற்றன.