நாளை முழு பொதுமுடக்கம்: 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு!

 

நாளை முழு பொதுமுடக்கம்: 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், எல்லா ஞாயிற்று கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் நாட்களில் வழக்கமாக இருக்கும் தளர்வுகள் கூட கிடையாது. பால் விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதற்கும் அனுமதி கிடையாது. அதே போல, காய்கறி கடைகள், டாஸ்மாக் உள்ளிட்ட எதுவும் இயங்காது.

நாளை முழு பொதுமுடக்கம்: 193 சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பு!

நாளை தமிழகத்தில் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை முழுவதும் 193 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து பேசிய சென்னை போலீசார், ஊரடங்கை மீறி வாகனங்கள் வந்தால் குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் தேவையற்ற காரணங்களுக்காக வெளியே வராமல் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், ஏதாவது சந்தேகங்கள் இருப்பின் 044-23452330/ 23452362 அல்லது 90031 30103 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.