டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

 

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

100 ஆண்டுகளுக்கு பிறகு தடக்களத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக்ஸ் தொடரின் தனிநபர் போட்டிகளில் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமை நீரஜ் சோப்ரா பெற்றுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் துப்பாக்கிச்சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்க பதக்கம் வென்றிருந்தார்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

இதனிடையே டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, நான்கு வெண்கலம் என 7 பதக்கங்களுடன் 65 வது இடத்தில் இருந்த இந்தியா நீரஜ் சோப்ராவின் வெற்றியினால் 47 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஒலிம்பிக்ஸ் வரலாற்றில் இந்தியாவின் அதிகபட்ச சிறப்பான செயல்பாடு இதுவாகும். கடந்த 2012 லண்டன் ஒலிம்பிக்சில் மொத்தமாக 6 பதக்கங்கள் வென்றதே இதற்கு முந்தைய சிறந்த செயல்பாடாக இருந்தது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 32வது ஒலிம்பிக் போட்டிகள் நாளையுடன் நிறைவு பெற உள்ளது. பதக்கப்பட்டியலில் சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் டாப் 3 இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடதக்கது. பளுதூக்கும் போட்டியில் மீரா பாய் சானுவும், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப்போட்டியில் ரவிக்குமார் தாகியாவும் வெள்ளி பதக்கம் வென்றனர். பேட்மிண்டன் ஆட்டத்தில் பிவி சிந்து, ஆடவர் ஹாக்கி அணி, மல்யுத்தம் 65 கிலோ எடைப் பிரிவில் பஜ்ரங் புனியா, குத்துசண்டையில் லவ்லினா ஆகியோர் வெண்கலம் பதக்கம் வென்றனர்.