டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

 

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

ஐபிஎல் தொடரை திருவிழாவைப் போல எதிர்பார்த்த சென்னை ரசிகர்கள் இனி அப்படி நினைப்பார்களா என்று தெரியவில்லை. ஏனெனில், சென்னை அணியின் ப்ளே ஆப் சுற்று கனவு நேற்றைய தோல்வியால் கிட்டத்தட்ட தகர்ந்துவிட்டது.

இன்றைய ஆட்டத்தில் மோதும் அணிகள் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

9 போட்டிகளில் 7 போட்டிகளின் வென்று 14 புள்ளிகளோடு பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது டெல்லி கேப்பிட்டல்ஸ். ஒவ்வொரு போட்டியிலும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர் ஸ்ரேயாஸ் தலைமையிலான டெல்லி அணியினர்.

9 போட்டிகளில் 3-ல் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இந்தப் போட்டியில் பஞ்சாப் வென்றால், ப்ளே ஆப் செல்வதற்கான வாய்ப்புகள் திறக்கும். ஏனெனில், இனி இருக்கும் ஐந்து போட்டிகளிலும் பஞ்சாப் வென்றால் 10 புள்ளிகள் கிடைக்கும். இப்போதிருக்கும் புள்ளிகள் 6 –யைச் சேர்த்தால் 16 ஆகக்கூடும். அப்போதைய நிலையில் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

பலம் வாய்ந்த டெல்லியை பஞ்சாப் வெல்வது சவாலானது.  ஆனால், முடியவே முடியாதது அல்ல. ஏனெனில் இந்த சீசனில் பஞ்சாப் முதன்முதலாக எதிர்கொண்ட டீம் டெல்லிதான். சரியாக அந்தப் போட்டி நடந்து ஒரு மாதமாகிறது.

முதலில் ஆடிய டெல்லி டீம் 157 ரன்கள் எடுத்தது. மார்கஸ் ஸ்டொயினிஸ் மட்டுமே 50 ரன்களைக் கடந்திருந்தார். அடுத்து ஆடிய பஞ்சாப் அணியில் மயங் அகர்வால் அற்புதமாக ஆடியிருந்தர். ஆயினும் பின் வரிசையில் மேஸ்வெல், பூரான் சொதப்பியதால் மேட்ச் சமன் ஆனது.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

அதிலும் இரண்டு ரன்கள் ஓடிய போது மயங் அகர்வால் கிரீஸைத் தொடவில்லை என்று ஒரு ரன் மட்டுமே கொடுத்தார் அம்பயர். ஆனால், ரீப்ளேவில் மயங் கிரீஸைத் தொட்டது தெரிந்தது. அம்பயரின் தவறான தீர்ப்பால் ஆட்டம் சூப்பர் ஓவருக்குச் சென்றது. சூப்பர் ஓவரில் பஞ்சாப் தோற்றது. எனவே டெல்லியை பஞ்சாப் வெல்ல முடியாது என்று கருத வேண்டாம்.

மேலும், பஞ்சாப் சமீபத்தில் பலம் வாய்ந்த மும்பை அணியை இரண்டு சூப்பர் ஓவர்கள் மூலம் தோற்கடித்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

பஞ்சாப் பேட்டிங்கில் கே.எல்.ராகுல் நல்ல  ஃபார்மில் இருக்கிறார்.  மயங் சற்று நீடித்து ஆட வேண்டியது அவசியம். கிறிஸ் கெயில் மூன்றாம் நபராக இறங்குவது நல்லதே. பூரண், ஹோடா சூழலுக்கு ஏற்ற ஆட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். மேக்ஸ்வெல் இன்றைக்காவது ஃபார்ம்க்குத் திரும்ப வேண்டும். பஞ்சாப் பவுலிங்கிலும் ஃபீல்டிங்கிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிக்கு வாய்ப்பு இருக்கிறது.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

பஞ்சாப்பைப் பற்றி இவ்வளவு சொல்வதற்கு காரணம், எதிரணியில் இவையெல்லாம் சரியாக வைத்திருக்கிற டெல்லி என்பதால்தான். டெல்லியில் ப்ரித்திவ் ஷா, தவான் என ஓப்பனிங்கில் நல்ல ஜோடி. அடுத்து ரஹானே, ஸ்ரேயாஸ், ஸ்டொயினிஸ், கேரி என பேட்டிங்க் ஆர்டர் பக்காவாக இருக்கிறது.

டெல்லியை வென்று பஞ்சாப் அணி ’ப்ளே ஆப்’ நோக்கிச் செல்லுமா? #IPL #KIXPvsDC

டெல்லி பவுலிங்கில் இந்த சீசனில் அதிக விக்கெட் எடுத்திருக்கும் ரபாடா டெல்லி அணிதான். துஷர், அஸ்வின், அக்‌ஷர் படேல், நோர்ட்ஜெ என எதிரணியை மிரட்டக் காத்திருக்கிறார்கள். இந்த வெற்றியால் டெல்லிக்கு பெரியளவில் பிரச்னை ஏதும் இல்லை என்றாலும் எந்த அணிதான் தோற்க விரும்பும். மேலும், ஐபிஎல் தொடரில் அனைத்துப் போட்டிகளையும் வெல்வேன் என்ற நம்பிக்கையோடு சொல்லும் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் எப்படி தோற்பார்?