’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

 

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்லும் எனப் பலராலும் கணிக்கப்பட்டது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஆனால், நடந்து முடிந்த 9 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வென்று 6 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது சென்னை. எட்டாம் இடத்தில் உள்ள ராஜஸ்தானும் 6 புள்ளிகள்தான். ஆனால், நெட் ரன்ரேட் அடிப்படையில் சற்று முந்தைய இடத்தில் உள்ளது சென்னை.

சென்ற சீசனில் இறுதிப்போட்டியில் ஒரே ரன்னில் கோப்பையைத் தவறவிட்டது சென்னை. அந்தளவுக்கு பலம் வாய்ந்த அணி, இந்த சீசனில் முதல் வெற்றியோடுதான் தொடங்கியது. ஆனால், அடுத்து தொடர்ந்து மூன்று போட்டிகள் தோல்வியைச் சந்தித்தது.

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

மீண்டும் ஐந்தாம் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை வென்றபோது ‘கம்பேக்’ என எல்லோருமே வாழ்த்தி வரவேற்றார்கள். ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளில் தொடர் தோல்விகள் அடைந்தது. மீண்டும் சிஎஸ்கே ரசிகர்கள் சோர்ந்து போனார்கள்.

ஹைதராபாத் அணியோடு வெற்றிபெற்றபோது அதேகதையாக இம்முறை நிச்சயம் எழுந்து வந்துவிடும் என நினைத்து ’கம்பேக்’ வாழ்த்தினார். ஆனால், அடுத்த போட்டியில் டெல்லியோடு மோதி தோல்வியைத் தழுவியது.

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

இன்று மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது. இன்று முதல் மீதமிருக்கும் ஐந்து போட்டிகளிலும் சென்னை வென்றால் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்கலாம். ஒரு போட்டியில் தோற்றாலும் ப்ளே ஆப் சுற்றுக்குச் செல்ல வாய்ப்பே இல்லை. அதிலும் அடுத்தடுத்த போட்டிகள் மும்பை, பெங்களூர், கொல்கத்தா எனப் பலம் வாய்ந்த அணிகளோடு இருக்கிறது.

சென்ற முறை ராஜஸ்தான் அணியோடு மோதுகையில் டாஸ் வின் பண்ணிய தோனி, பவுலிங்கை தேர்தெடுத்தார். சஞ்சு சாம்சன், ஸ்மித், ஆர்ச்சரின் அதிரடியால் 216 ரன்கள் குவித்தது. சென்னை 200 ரன்களுக்குள் சுருண்டது.

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

இன்றைய அணியில் என்னென்ன மாற்றங்களை தோனிக் செய்யப்போகிறார் என்பது பலர் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். சென்ற போட்டியில் கேதார் ஜாதவ்க்கு மறுபடியும் வாய்ப்பு அளித்தது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. இம்முறை அவரே இடம்பெறுவாரா… இல்லை ஜெகதீஷன் அல்லது ருத்ராஜ் ஓப்பனிங் இறங்க வாய்ப்பளிக்கப்படுமா என்று தெரியவில்லை. சாம்கரனை ஓப்பனிங் இறக்க துணிகிற தோனி, ஜெகதீஷனை களம் இறக்க தயங்குவது ஏன்?

பிராவோ சென்ற போட்டியில் காயம் அடைந்திருந்தார். அவர் இன்று ஆடுவாரா என்பது சந்தேகமே.. அவர் இல்லையெனில், இம்ரான் தாக்கூருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங்கிள் ஆள் கூட்டாது, பியூஷ் சாவ்லாவோடு ஏழு பவுலர் கூட்டணி போடக்கூடும் என்ற கணிப்பும் ஒரு பக்கம் இருக்கிறது.

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

இன்றைக்கு டாஸ் வென்றால், வழக்கம்போல பீல்டிங் தேர்வு செய்வாரா தோனி, இன்றைக்கும் சாம்கரனை ஓப்பனிங் இறக்குவரா, கேதார் ஜாதவ்க்கு அணியில் இடம் உண்டா என ஆடும் லெவன் அணியைத் தெரிந்துகொள்ளும் ஆவல் அதிகரிக்கிறது.

அனுபவம் வாய்ந்த தோனியின் ஸ்டேட்டர்ஜி இந்த முறை சென்னை அணிக்கு வெற்றியைப் பெற்று தர வேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. ரசிகர்களின் விருப்பத்தை தோனி நிறைவேற்றுவாரா என்பது இன்னும் சில மணிநேரங்களில் தெரிந்துவிடும்.

’எத்தனை முறைதான் கம்பேக் சொல்வது கேப்டன் தோனி?’ #CSKvsRR #IPL

ஏனெனில், இன்றைய ஆட்டம் என்பது இந்தச் சீசனில் மிக முக்கியமான போட்டி என்பது இரு அணிகளுக்கும்தான். எனவே போட்டி விறுவிறுப்பாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.