தங்க விலை சரிவு; ஒரு கிராம் தங்கம் ரூ.4,802க்கு விற்பனை!

 

தங்க விலை சரிவு; ஒரு கிராம் தங்கம் ரூ.4,802க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்திருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலானதில் இருந்து தங்க விலை அதிரடியாக ஏற்றத்தை சந்தித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ.29 ஆயிரத்தில் நீடித்து வந்த தங்க விலை, கடந்த மார்ச் மாதம் வரலாறு காணாத ஏற்றத்தை சந்தித்து ரூ.43 ஆயிரத்தை எட்டியது. பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியும், தங்கத்தின் வரத்து குறைந்ததுமே இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதனைத்தொடர்ந்து தங்க விலை கணிசமாக குறைந்து தற்போது ரூ.38 ஆயிரத்தில் நீடிக்கிறது.

தங்க விலை சரிவு; ஒரு கிராம் தங்கம் ரூ.4,802க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.4,802க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.384 குறைந்து ரூ.38,416க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.64.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.