இந்த இரண்டு ராசிக்கும் இன்று முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

 

இந்த இரண்டு ராசிக்கும் இன்று முழுவதுமே அதிர்ஷ்டம் தான்!

இன்றைய ராசிபலன்கள் (20-05-2020)புதன்கிழமை

நல்ல நேரம் : காலை 9.30 மணிமுதல் 10.30 வரை
மாலை 3.30மணி முதல் 4.30வரை
ராகு காலம் : மதியம்12.00மணிமுதல் 1.30வரை
எமகண்டம் :காலை7.30 மணி முதல் 9.00வரை

மேஷம்
உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லுங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம்.

ரிஷபம்
மனதிற்கு இதமான செய்தி வரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். உங்களில் சிலர் நகை அல்லது வீட்டு உபயோக பொருள் வாங்குவீர்கள்.

மிதுனம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் லோசனையை ஏற்பார்கள். நண்பர்கள் உங்கள் நாளை பிரகாசமாக்குவார்கள். இன்று பாராட்டு மழை பொழிவார்கள்.

கடகம்
விதியை நம்பி இருக்காதீர்கள். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

சிம்மம்
அடுத்தவர்களிடம் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்துச் செல்லும். சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கன்னி
விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

துலாம்
எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.

விருச்சிகம்
குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

தனுசு
பழைய கடன்களைப் பற்றி யோசிப்பீர்கள். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்
சொத்துப் பிரச்னைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். வெற்றிக்கு வித்திடும் நாள். இன்று உங்களுக்கான நாளாக அமைந்திருக்கிறது. இன்றைய காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும்.

கும்பம்
நீண்ட நாட்களுக்குப் போக்கு காட்டிய பணம் கைக்கு வரும். உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள். அதிர்ஷ்டமான நாள்

மீனம்
சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள்.