எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கும்!

பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும்.

இன்றைய ராசிபலன்கள்
04–06-2020 (வியாழக்கிழமை)

நல்ல நேரம் :
காலை 10.30 மணி முதல் 11.30 வரை
மாலை 5 மணி முதல் 6 வரை
ராகு காலம்
1.30 மணி முதல் 3 வரை
எமகண்டம்
காலை 6 மணி முதல் 7.30 வரை

மேஷம்
குடும்ப பெரியோர்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். பொதுக்கூட்டப் பேச்சுக்களில் தேவையான ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை கொண்டு புதிய தொழில்கள் அமைக்கும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும்.
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தொழில் சார்ந்த விவகாரங்களில் விவேகத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் எண்ணிய இலாபம் உண்டாகும். பூமி விருத்திக்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்
பொறுமையுடன் புதிய செயல்திட்டங்களை அமைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். சர்வதேச வணிகத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும்.
கடகம்
பொருட்களை கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வாக்குவாதங்களில் அமைதியாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் ஏற்பட்ட இன்னல்கள் குறைந்து முன்னேற்றம் காண்பீர்கள். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே உறவுகள் மேம்படும். தர்க்க விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் இலாபம் உண்டாகும். கால்நடை வளர்ப்பவர்களுக்கு சில விரயங்கள் நேரிடும். ஆன்மிக எண்ணங்கள் மேலோங்கும்.
துலாம்
சபைகளில் ஆதரவாக இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளால் எண்ணிய பலன்கள் கிடைக்கும். முதலாளி மற்றும் தொழிலாளிக்கு இடையே சாதகமான சூழல் அமையும். சிறிய பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சகம்
உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த கடன் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய நபர்களின் ஆதரவால் இலாபம் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலையாட்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நீண்ட நாள் உறவினர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள்.
தனுசு
நிர்வாக திறமைகள் புலப்படும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். பயணங்களால் விரயச் செலவுகள் உண்டாகும். எடுத்துரைக்கின்ற பேச்சுத்திறனால் புகழப்படுவீர்கள். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும். பதவி உயர்விற்கான சூழல் உண்டாகலாம்.
.மகரம்
உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் ஒருவிதமான கவலைகள் தோன்றி மறையும். நெருங்கிய நபர்களிடம் நிதானம் வேண்டும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். செய்யும் செயலில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும்.
கும்பம்
நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் உருவாகும். பயணங்களால் எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பொருட்சேர்க்கை உண்டாகும். பணி சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். எதிர்பார்த்த தனவரவுகளால் பணப்புழக்கம் மேம்படும்.
மீனம்
தொழில் சம்பந்தமான கடன் உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். செய்தொழிலில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறைந்து சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

Most Popular

ரூ.1.10 கோடி லஞ்சம் வாங்கிய தாசில்தார் கையும் களவுமாக பிடிபட்டார்!! (வீடியோ)

தெலங்கானாவில் ஒரு கோடியே பத்து லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய தாசில்தாரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்தனர். மல்காஜிரி மாவட்டத்தில் உள்ள கீசாரா மண்டலத்தில், ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றிற்கு...

குடும்பத்தினருடன் உங்கள் 2 ஆவது இன்னிங்சை தொடங்க தோனிக்கு சச்சின் வாழ்த்து!

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்திருந்தார். அதன்பின் டி20மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டும் தோனி தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி...

ஜோ பிடன் அதிபரானால் அமெரிக்கா பாதுகாப்பற்ற நாடாகிவிடும்: அதிபர் ட்ரம்ப்

ஜோபிடன் அதிபரானால் அமெரிக்காவில் எவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு...

தடுப்பு மருந்து உற்பத்தியை தொடங்கியது ரஷ்யா!

ரஷ்யா அறிமுகம் செய்த கொரோனா தடுப்பு மருந்தான 'ஸ்புட்னிக் v' இன் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் உலக நாடுகளிடையே...
Do NOT follow this link or you will be banned from the site!