7.5% உள்ஒதுக்கீடு யாருக்கு பொருந்தும்? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

 

7.5% உள்ஒதுக்கீடு யாருக்கு பொருந்தும்? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

திருச்சி

7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், நாளை வரை மருத்துவ படிப்பிற்கு யாரும் விண்ணப்பிக்கலாம் என்றும், மருத்துவ படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வரும் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு, அதன் பிறகு ஒரிரு நாளில் கலந்தாய்வு நேரில் தொடங்கி நடைபெறும் என்றும் கூறினார்.

7.5% உள்ஒதுக்கீடு யாருக்கு பொருந்தும்? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

மேலும், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளிகளில் படித்த, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட மாணவர்கள் மட்டுமே தகுதி பெறுவர் என்று தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், கிராமப்புற செவிலியர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும், கோவிஷ் என்ற வாக்ஸின் மூலம் 75 பேரிடம், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் முதற்கட்ட பரிசோதனை நல்லமுறையில் முடிந்துள்ளதாகவும், தற்போதுவரை பக்கவிளைவுகள் இல்லாத நிலையில்,

7.5% உள்ஒதுக்கீடு யாருக்கு பொருந்தும்? – அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

ஒரு மாதம் கழித்து இரண்டாவது டோஸ் போட வேண்டும் எனவும் தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், அதற்கான நடவடிக்கையும் தற்போது நல்லமுறையில் நடந்து வருவது நம்பிக்கை அளிப்பதாகவும், அதேபோன்று, கோவாக்சின் அடுத்த டிரையல் செய்வதற்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், இதுவும் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தீபாவளியை சுயக்கட்டுப்பாடுடன் கொண்டாடினால் கொரோனாவின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்த அமைச்சர்,

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக இதுவரை 8 மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்..