ஆபாச படம் டவுண்லோடு… இளைஞர்களுக்கு விற்பனை… சிக்கிக் கொண்ட கால்நடை டாக்டர்

 

ஆபாச படம் டவுண்லோடு… இளைஞர்களுக்கு விற்பனை… சிக்கிக் கொண்ட கால்நடை டாக்டர்

இணையத்தில் பெண்களின் ஆபாச படத்தை டவுண்லோடு செய்து, இதனை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்த கால்நடை டாக்டர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளார்.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் அதிகாரிகள் குடியிருப்பு செயல்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் கால்நடை மருத்துவர் அருள் வசித்து வருகிறார். மணப்பாறையை அருகே பூலாம் பட்டியில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் இவர், வெப் சைட்டுகளில் பெண்களின் ஆபாசப் படங்களை டவுண்லோடு செய்து வந்துள்ளார். மேலும் அப்லோட் செய்வதோடு, போலியான ஐடியை உருவாக்கி இளைஞரின் படத்தை மாற்றி வைத்து பெண்களுடன் பாலியல் எண்ணத்தைத் தூண்டும் விதமாக செயல்பட்டு வந்துள்ளார். இதற்காக பல சிம் கார்டுகளையும் பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில், டாக்டர் அருளின் செயல்பாடுகளை கண்காணித்த திருச்சி மாநகர சைபர் க்ரைம் காவல்துறையினர், அவரின் முகவரியை கண்டுபிடித்தனர். இதையடுத்து, திருச்சி கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், போஸ்கோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் அருளை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து லேப் டாப், 4 சிம் கார்டுகள், இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.