Home வணிகம் வருமான வரி தாக்கல் செய்ய - நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரி தாக்கல் செய்ய – நவ. 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வருமான வரி தாக்கல் செய்ய நவம்பர் இறுதி வரை கால அவகாசம் நீட்டிப்பு - Vivegam  News | DailyHunt

2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறையாகும். கொரோனா தொற்று பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தினால், நாடெங்கிலும் வரி செலுத்துவோர் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகினர். இதனை கருத்தில் கொண்டு, 2018-19ம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது.

வருமான வரி தாக்கல்: நிறுவனங்களுக்கு நவ.30 வரை கால நீட்டிப்பு | வருமான வரி  தாக்கல்: நிறுவனங்களுக்கு நவ.30 வரை கால நீட்டிப்பு

ஏற்கனவே, கடந்த மார்ச் 31ம் தேதியாக இருந்த இறுதி தேதி, ஜூன் 30ம் தேதியாகவும், பின்னர் அது ஜூலை 31ம் தேதியாகவும் நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து கால அவகாசம் 3வது முறையாக செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்றுடன் ( செப். 30) அவகாசம் முடியும் நிலையில், மீண்டும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை கூடுதலாக 2 மாதங்களுக்கு வருமான வரித்துறை நீட்டித்துள்ளது. அதன்படி வரும் நவம்பர் 30ம் தேதி வரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்யலாம் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

Income Tax Return Filing: How incomes from other sources are taxed - The  Financial Express
  • எஸ்.முத்துக்குமார்

மாவட்ட செய்திகள்

Most Popular

கைலாசாவில் மருது சகோதரர்களுக்கு நினைவில்லம் அமைக்க கோரி கடிதம்

மதுரை கைலாசா நாட்டில் மருது சகோதரர்களுக்கு நினைவாலயம் அமைக்க வலியுறுத்தி, நித்யானந்தாவிற்கு மருதிருவரின் மக்கள் களம் என்ற அமைப்பு கடிதம் மற்றும் போஸ்டர்கள் மூலமாக கோரிக்கைவிடுத்துள்ளது.இதுதொடர்பாக,...

கட்டுமான நிறைவுச் சான்றின்றி மின் இணைப்பு தர சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை!

கட்டுமான நிறைவுச் சான்று இல்லாமலேயே மின் இணைப்பு அனுமதி பெறலாம் என்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. கோவையை சேர்ந்த நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில்...

நாகை, கடலூரில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதால் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது....

அக்.26-இல் ராஜராஜ சோழனின் சதயவிழா; கொரோனாவால் நிகழ்ச்சிகள் ரத்து

தஞ்சாவூர் தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1035-வது ஆண்டு சதயவிழா வரும் 26ஆம் நடைபெறும் என விழாக்குழு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சதயவிழா...
Do NOT follow this link or you will be banned from the site!