கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க, இதை குடிங்க போதும்!

 

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க,  இதை குடிங்க போதும்!

கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கால கட்டத்தில், நோய் பாதிப்பில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள, பலரும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை கடைபிடித்து வருகின்றனர். ஆனால், நமது அன்றாட உணவில் இடம்பெறும் மோர், நோய் எதிர்ப்பு ஆற்றலை பன்மடங்கு அதிகரிக்கும் தன்மையுடையது என்ற தகவல் இங்கு, பலரும் அறியாமலே உள்ளனர்.

தயிரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் மோரில் இருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியா, கார்போஹைட்ரேட் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை, மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பன்மடங்கு அதிகரிக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. அளவுக்கு அதிகமான உணவையோ, அல்லது கார உணவை சாப்பிட்டால் பலருக்கும் செரிமான கோளாறு ஏற்படும்.

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க,  இதை குடிங்க போதும்!

அப்போது மோர் குடித்தால் செரிமான பிரச்சினையில் இருந்து உடனடி விடிவு கிடைக்கும். இதேபோல், வாய்வு மற்றும் மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்படுவோர், நாள்தோறும் ஒரு டம்ளமர் மோர் குடித்து வரும்பட்சத்தில், குடல் பிரச்சினைகளை சரி செய்வதுடன், மலச்சிக்கலை போக்கி, செரிமான மண்டலத்தை சீரமைக்க உதவி புரிகிறது.

கோடை காலங்களில் மனித உடலில் இருந்து வியர்வை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் அதிகப்படியான நீர் வெளியேறும் வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில் வியர்வை, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட்டு, உடல் முழுமையாக ஆற்றலையும் இழக்கும் அபாயமும் உள்ளது.

கோடையில் நீரிழப்பு பிரச்சினையை தவிர்க்க,  இதை குடிங்க போதும்!

இதனால், பாதிக்கப்பட்டவர்கள் மயக்க நிலைக்கு கூட செல்லும் நிலையும் உள்ளது. அந்த சமயங்களில் மோரில், உப்பு, சீரகம், கருப்பு மிளகு ஆகியவற்றை சேர்த்து குடித்தால், அவற்றில் இருக்கும் அதிகப்படியான எலக்ட்ரோலைட்டுகள் நீரிழப்பை ஈடுகட்டும் ஆற்றல் கொண்டுள்ளது.

மோரில் ஊட்டச்சத்துக்களும், நொதிகளும் நிறைந்து உள்ளதுடன், குறைந்த அளவிலான கலோரிகளும், முற்றிலும் கொழுப்பு அற்றும் உள்ளது. இதனால், மனித உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் வல்லமை கொண்டுள்ளது. குறிப்பாக மோரில் கால்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின்கள் அடங்கியுள்ளதால் பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.இதேபோல், மோரில் உள்ள பயோ ஆக்டிவ் புரதம் ரத்த அழுத்தத்தை குறைத்து, கட்டுக்குள் வைக்கும் வல்லமை கொண்டுள்ளது.