வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு : பக்தர்கள் மகிழ்ச்சி!!

 

வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு : பக்தர்கள் மகிழ்ச்சி!!

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜுலை 12 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ள நிலையில் இன்று கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு : பக்தர்கள் மகிழ்ச்சி!!

தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகள் அமலுக்கு வந்தன. தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடு காரணமாக இன்று காலை 6 மணி முதல் முடிவடைந்த நிலையில் மீண்டும் இன்று முதல் வருகின்ற 12ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து வழிபாட்டு தலங்கள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு நடத்த அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்க்கனவே கோயில்கள் திறக்கப்பட்ட நிலையில் மற்ற மாவட்டங்களில் இன்று முதல் மீண்டும் சாமி தரிசனத்திற்காக கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன.

வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பு : பக்தர்கள் மகிழ்ச்சி!!

இந்நிலையில் தமிழகத்தில் வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறப்பால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருகின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 5ம் தேதி முதல் காலை 6 மணி முதல் 12.30 மணி மற்றும் மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் எந்த ஒரு இடத்திலும் உட்காரவோ, கோயிலுக்குள் தேங்காய் பழம் கொண்டு வரவோ, அர்ச்சனை செய்வதற்கோ அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.