டிஎன்பிஎல்- சேப்பாக்கம் அணியை வீழ்த்தி திருச்சி அணி அபார வெற்றி

 

டிஎன்பிஎல்- சேப்பாக்கம் அணியை வீழ்த்தி திருச்சி அணி அபார வெற்றி

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 28வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் ரூபி வாரியர்ஸ் திருச்சி ஆகிய அணிகள் மோதின.

டிஎன்பிஎல்- சேப்பாக்கம் அணியை வீழ்த்தி திருச்சி அணி அபார வெற்றி

டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கௌசிக் காந்தி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். சேப்பாக் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கௌசிக் காந்தி மற்றும் ஜெகதீசன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.இதன் பிறகு வந்த ராதாகிருஷ்ணன் நிதானமாக ஆட மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். ராதாகிருஷ்ணன் 55 ரன்களில் ஆட்டமிழக்க சிறப்பாக சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்களை எடுத்தது.ரூபி வாரியர்ஸ் திருச்சி அணியில் அதிகபட்சமாக சரவணன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

133 என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி அணியில் சந்தோஷ் 25 ரன்கள் எடுத்து சுமாரான தொடக்கம் தந்தார். அதன் பிறகு களமிறங்கிய நிதிஸ் ராஜகோபால் அரை சதம் அடித்து அசத்தினார். இறுதிகட்டத்தில் ஆதித்யா கணேசஷ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் 19.1ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து திருச்சி அணி அபார வெற்றிப்பெற்றது. இதன்மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது திருச்சி அணி.