#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி வாகை சூடப்போவது யார்?

 

#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி  வாகை சூடப்போவது யார்?

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய சூழலில் திமுக -அதிமுகவுக்கு நேரடிப் போட்டி நிலவுகிறது திமுக கூட்டணியில் காங்கிரஸ் ,விசிக ,மதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி ,கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக,பாமக , தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உட்பட சிறிய கட்சிகள் 6 இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்த தேர்தலில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் ஓரளவு தாக்கத்தை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த தேர்தல்களில் திருவாரூர்…

#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி  வாகை சூடப்போவது யார்?

திருவாரூர் தொகுதியில் 1991ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளரான தம்புசாமி சுமார் 55 ஆயிரத்து 653 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதன்பிறகு 1996 ஆம் ஆண்டு திமுகவை சேர்ந்த அசோகன் என்பவர் 69 ஆயிரத்து 212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து 2001 .2006 ஆம் ஆண்டுகளில் திமுகவே திருவாரூர் தொகுதியை கைப்பற்றி வந்தது. இதைத் தொடர்ந்து 2011ஆம் ஆண்டு தனது சொந்த தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சுமார் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 4 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அதைப்போல் 2016 சட்டமன்ற தேர்தலிலும் கருணாநிதி திருவாரூர் பகுதியைத் தேர்ந்தெடுத்து களம் கண்ட நிலையில், அவர் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 473 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் 2019ஆம் ஆண்டு திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூண்டி கலைவாணன்.

2021 சட்டமன்ற தேர்தல் : திமுக vs அதிமுக

#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி  வாகை சூடப்போவது யார்?

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக இந்தமுறையும் பூண்டி கலைவாணன் களமிறக்கப்படுகிறார். அதேசமயம் அதிமுக சார்பில் திருவாரூர் தொகுதியில் ஏ.என்.ஆர். பன்னீர்செல்வம் போட்டியிடவுள்ளார்.

ஆளப்போவது யார்? டாப் தமிழ் நியூஸ் களநிலவரம்!

இந்த சூழலில் மக்களின் தற்போதைய மனநிலை என்ன? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் நமது டாப் தமிழ் நியூஸ் யூடியூப் சேனல் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போகும் தொகுதி திருவாரூர்.

#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி  வாகை சூடப்போவது யார்?

திருவாரூர் தொகுதி மக்களிடம் உங்கள் ஒட்டு யாருக்கு என்று கேட்டபோது, அவர்களில் பெரும்பாலானவர்கள் திமுக என்று கூறியுள்ளனர். திமுகவுக்கு அடுத்தபடியாக அதிமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் இருக்கின்றன. அதேபோல் திமுக – அதிமுக இல்லாமல் மூன்றாவதாக எந்த கட்சி வரவேண்டும் என்ற கேள்விக்கு? தினகரன், கமல் ஹாசன், சீமான் , பாஜக ஆகிய கட்சிகள் பெயர்கள் பதிலாக கிடைத்துள்ளது. திருவாரூர் தொகுதியின் முக்கிய பிரச்னையாக அங்குள்ள மக்கள் கூறியுள்ளது சாலை பிரச்சனை மற்றும் அடிப்படை பிரச்னைகளை மேம்படுத்த வேண்டும் என்பதேயாகும்.

#Thiruvarur “கருணாநிதி ஊர் மக்களின் புலம்பல்” : வெற்றி  வாகை சூடப்போவது யார்?

அதேபோல் இப்போதுள்ள அதிமுக அரசுக்கு எத்தனை மதிப்பெண் அளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, அதிகபட்சமாக 10 க்கு 8 என்றும், குறைந்தபட்சமாக பூஜ்யம் என்றும் கூறியுள்ளனர். இந்த ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில், எதிர்க்கட்சியான திமுக திருவாரூரில் ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது.