மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை- மின் வாரியம்

 

மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை- மின் வாரியம்

கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், மார்ச் மாதம் மின்சாரம் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்று கணக்கெடுக்க முடியவில்லை. ஜனவரி மாதக் கணக்கு அடிப்படையில் ஏப்ரல் மாதம் கட்டணம் செலுத்த தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியது. அப்போது இதில் மோசடி திட்டம் உள்ளது. யூனிட் பயன்பாடு ஸ்லாப்பில் ஒரு யூனிட் உயர்ந்தால் கூட அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமே, தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்று பலரும் கேள்வி எழுப்பினர். மின் கட்டணத்தை அளவீடு செய்யும்போது பார்த்துக்கொள்வோம் என்று மழுப்பியது தமிழக அரசு. தற்போது கொரோனா தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. மின் பயன்பாடு கணக்கீடும் தொடங்கியுள்ளது. வழக்கமாக கோடைக்காலங்களில் மின் பயன்பாடு அதிகமாகவே இருக்கும். இதை சாதகமாக பயன்படுத்தி புரியாத கணக்கீட்டை வழங்கி இரண்டு, மூன்று மடங்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கிறது தமிழ்நாடு மின்சார வாரியம் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை- மின் வாரியம்

இந்நிலையில் நடிகர் பிரசன்னா, “தமிழ்நாடு மின்சார வாரியம் TNEB கொரோனா லாக்டவுனில் கொள்ளை அடிக்கிறது என எத்தனை பேர் நினைக்கிறீர்கள்?” என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த மாதம் தந்தை, மாமனார் மற்றும் தன்னுடைய வீட்டிற்கு சேர்த்து ரூ.70,000 க்கு மேல் மின்சார கட்டணம் செலுத்தியதாகவும், இது ஜனவரி மாதத்தை காட்டிலும் பல மடங்கு உயர்ந்திருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடிகர் பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு மின்வாரியம் பதில் அளித்துள்ளது.  அதில், வழக்கமான நடைமுறையின்படி, 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டணம் கணக்கிடப்படுகிறது. பொதுமக்களுக்கு சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட அலுவலகத்தை அணுகி தெளிவு பெறலாம். 4 மாத மின் நுகர்வு இரண்டு மாதங்களாக பிரிக்கப்பட்டு அதன்படி மின் கட்டணம் கணக்கீடப்படுகிறது. முந்தைய மாத கட்டணம் கழிக்கப்பட்டதும் மின் கட்டண தொகை கணக்கிடப்படுகிறது. மேலும் மார்ச் மாதத்திற்கான மின் கட்டணத்தை பிரசன்னா கட்டவில்லை என்றும் மின்வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது.