கடல் சீற்றம், அதிவேகத்தில் காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

 

கடல் சீற்றம், அதிவேகத்தில் காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

தென் தமிழகத்தில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை முதல் நவ.24 ஆம் தேதி வரை கடல் சீற்றமாக காணப்படும் என்றும் கடல் அலைகள் 2.5மீ முதல் 3.5 மீட்டர் வரை உயர வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழக கடல் பகுதிகளில் 2.0 மீட்டர் முதல் 3.8 மீட்டர் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் சீற்றம், அதிவேகத்தில் காற்று வீசக்கூடும்- வானிலை ஆய்வு மையம்

இதேபோல் தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பு தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னறிவிப்பு: இந்தியப் பெருங்கடல் தென் வங்காள விரிகுடாவின் மையப் பகுதிகள் நவம்பர் 22 அன்று மணிக்கு 40-50 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 60 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 23 அன்று மணிக்கு 45-55 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 65 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 24 அன்று மணிக்கு 55-65 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 75 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

நவம்பர் 25 அன்று மணிக்கு 80-90 கிமீ வேகத்திலும் (அதிகபட்சம் 100 கிமீ) வேகத்திலும் காற்று வீசக்கூடும்.

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.