கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு: துணை முதல்வர் தகவல்!

 

கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு: துணை முதல்வர் தகவல்!

கொரோனா பாதிப்பால் தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்திருப்பதாக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கிட்டத்தட்ட 6 மாதங்களாக கொரோனாவில் இருந்து மக்களை காக்க அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. குறிப்பாக பாதிப்பு அதிகமாக இருந்த சென்னையை கொரோனாவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசுக்கு ஏற்பட்ட செலவுகள் ஏராளம்.

கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு: துணை முதல்வர் தகவல்!

தமிழக அரசுக்கு கொரோனாவால் நிதி நெருக்கடி ஏற்பட்டும், முதல்வருக்கு கொரோனா நிதி வழங்கும் திட்டத்தின் மூலம் அரசு தனது சேவையை தொடர்ந்தது. இந்த நிலையில் இதுவரை கொரோனாவுக்கு தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்திருப்பதாக துணை முதல்வர் ஓபிஎஸ் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையாக ரூ.4896.05 கோடியும், கொரோனா தடுப்பு மற்றும் சிகிச்சைக்காக ரூ. 638.85 கோடியும், தனிமைப்படுத்தலுக்காக ரூ.262.25 கோடி செலவிடப்பட்டதாக ஓபிஎஸ் குறிப்பிட்டார்.