கொரோனா எதிரொலி; செலவுகளை குறைக்க தமிழக அரசு முடிவு

 

கொரோனா எதிரொலி; செலவுகளை குறைக்க தமிழக அரசு முடிவு

அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு வெளியிட்டது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலகங்களில் புதிய பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. கொரோனாவால் முடங்கியுள்ள பொருளாதாரத்தை மீட்க புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா எதிரொலி; செலவுகளை குறைக்க தமிழக அரசு முடிவு

தமிழக அரசு அலுவலகங்களுக்கான செலவுகளில் 20% குறைக்கவும், அரசு விழாக்களில் நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முடிவெடுத்துள்ளாது. சால்வைகள், பூங்கொத்துகள் வழங்குவதற்கான செலவுகள் அறவே தவிர்க்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளை வாங்குவதை 50% குறைக்கப்பட வேண்டும் என்றும் அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானபயணத்துக்கு அனுமதியில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கும், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை மட்டுமே உபகரணங்களை கொள்முதல் செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேவையின்றி மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு செலவில் அரசு உயரதிகாரிகள் வெளிநாடு செல்வதற்கான பயணத்திற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. விளம்பரச் செலவகளை 25% குறைத்துக் கொள்ள அனைத்து அரசுத்துறைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு செலவிலான விருந்து நிகழ்ச்சிகள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.