தமிழக பள்ளிகளை நவம்பரில் திறக்கத் திட்டம்! – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

 

தமிழக பள்ளிகளை நவம்பரில் திறக்கத் திட்டம்! – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டை வருகிற நவம்பர் மாதம் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.

கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு பொதுத் தேர்வுகளைக் கூட சரியாக நடத்த முடியாத நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டன. தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. அவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கட்டுப்படத் தொடங்கியுள்ளதால் நவம்பரில் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கலாமா என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழக பள்ளிகளை நவம்பரில் திறக்கத் திட்டம்! – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
ஏற்கனவே, குறைவான நாட்கள் பள்ளிகள் செயல்படும் என்பதால் பாடங்களைக் குறைக்க குழு அமைக்கப்பட்டு அறிக்கை, பரிந்துரைகள் வாங்கப்பட்டுள்ளன. நவம்பரில் பள்ளிகளைத் திறந்து நேரடியாக இறுதித் தேர்வை மட்டும் நடத்தலாம் என்று தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். அந்த நேரத்தில் தேர்வுகளை நடத்துவது சரியாக இருக்காது என்பதால், ஜூன் மாதம் பொதுத் தேர்வை நடத்தலாம் என்று அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக பள்ளிகளை நவம்பரில் திறக்கத் திட்டம்! – பள்ளிக் கல்வித்துறை விளக்கம்!
இந்த நிலையில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என்று வெளியான செய்தி தவறானது. பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் விளக்கம் அளிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.