என்னது.. மினி லாக்டவுனா? தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு!

 

என்னது.. மினி லாக்டவுனா? தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு!

தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. பழைய படியே நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தியதன் பேரில், தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

என்னது.. மினி லாக்டவுனா? தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு!

ஆலோசனையின் முடிவில், மாஸ்க் போடாமல் பொது இடங்களுக்கு செல்வோருக்கும் சமூக இடைவெளியை பின்பற்றாதோருக்கும் அபராதம் விதிக்க ராஜிவ் ரஞ்சன் உத்தரவு பிறப்பித்தார். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அவர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார். இதனிடையே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவியதால் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. மீண்டும் லாக்டவுன் போடப்படுமா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் வெகுவாக எழுந்துள்ளது.

என்னது.. மினி லாக்டவுனா? தமிழக அரசு எடுத்த திடீர் முடிவு!

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாதிப்பு அதிகமாக இருக்கும் ஒரு குறிப்பிட்ட பகுதி, வீடு அல்லது தெருவில் ஊரடங்கு போடப்பட வாய்ப்பு உள்ளது. அதாவது மினி ஊரடங்கு மாதிரி அமல்படுத்தப்படும். லாக் டவுன் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.