திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு!

 

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு!

திண்டுக்கல்லில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் கைதான நபர் விடுதலையானதை எதிர்த்து, தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள குரும்பபட்டி கிராமத்தில் வசித்து வந்த 12 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அந்த சிறுமி மின்சாரம் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் கிருபானந்தன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு!

அண்மையில் இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மகிளா நீதிமன்றம், கிருபாகரன் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி அந்த நபரை விடுதலை செய்தது. இந்த தீர்ப்பு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல இடங்களில் போராட்டம் நடைபெற்ற நிலையில், சிறுமிக்கு நீதி கிடைக்க அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் சி.வி சண்முகம் உறுதியளித்தார்.

திண்டுக்கல் சிறுமி கொலை வழக்கு: தமிழக அரசு மேல்முறையீடு!

அதன் படி தற்போது, திண்டுக்கல் சிறுமி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளது.