கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!

 

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!

கொரோனா தடுப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தும் வகையில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்த முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் பொதுமக்களின் பங்களிப்பை வழங்கும்படி அரசு கோரிக்கை விடுத்துள்ள்ளது. கடந்த வருடம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் இந்த வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் பெரிதாக எந்த வரவேற்பும் இல்லை. ஆனால் இம்முறை ஏராளமானோர் நிதியளித்து வருகின்றனர்.

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!

அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலபதிபர்கள், திரைத் துறை பிரபலங்கள் ஆகியோர் தாரளமாக நிதி வழங்குகின்றனர். திமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை நிதியாக வழங்கினர். அதேபோல விசிக எம்பியான திருமாவளவனும், நான்கு எம்எல்ஏக்களும் பாமக எம்எல்ஏக்களும் தங்களது சம்பள தொகையை வழங்கினர்.

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கினார் ஆளுநர் பன்வாரிலால்!


திரைத்துறையைப் பொறுத்தவரை நடிகர் சிவகுமாரும் அவரது மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து 1 கோடி ரூபாய் வழங்கினர். நடிகர் அஜித்குமார் 25 லட்சம் ரூபாய் வழங்கினார். இது தவிர பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர். இச்சூழலில் தமிழ்நாடு ஆளுநரான பன்வாரிலால் புரோகித் 1 கோடி ரூபாய் நிதி அளித்திருக்கிறார். இதனிடையே முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆளுநரைச் சந்தித்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கிறார்.