தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடும் என அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடும் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதம் ரம்ஜான் பெருநாள் வருவதால் அன்று தொழுகையை எவ்வாறு நடத்துவது என்று இஸ்லாமிய மக்கள் குழப்பத்தில் உள்ளனர். சிறப்புத் தொழுகையை வீடுகளிலேயே செய்வது போல ரம்ஜான் பண்டிகையையும் வீட்டிலேயே தொழுகையை நடத்தலாம் என்றும் இந்த நன்னாளில் வாழ்த்துக் கூறவேண்டி யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் தலைமை காஜி அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை திங்கட்கிழமை கொண்டாடும் என அறிவிப்பு

இந்நிலையில் தமிழகத்தில் இன்று பிறை தென்படாததால் ரமலான் திங்கட்கிழமை கொண்டாடப்படும் என அரசு தலைமைக் காஜி அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மூடப்பட்ட மசூதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும், ஆதலால் வீடுகளிலேயே முஸ்லிம்கள் தொழுகை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.