தமிழகத்தில் இன்று மட்டும் கோவிட்-19 தொற்று 776 பேருக்கு உறுதி! மொத்த பாதிப்பு 13,967 ஆக உயர்வு!

- Advertisement -

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 49லட்சத்து 24ஆயிரமாக அதிகரித்துள்ளது. 3லட்சத்து 20ஆயிரம் பேரை உயிரிழக்க செய்த இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அதனால், அதிக அளவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கொரோனா வைரஸ்கான தடுப்பூசிகளை கண்டுபிடிப்பதில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தமிழகத்தில் நேற்று வரை 11,224 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

- Advertisement -

- Advertisement -

இந்நிலையில் இன்று தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 79 பேர் உட்பட 776 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோவிட்-19-னால் பாதித்தவர்களில் இன்று மட்டும் 400-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,282ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 7பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 94ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கு தமிழகத்தில் 63ஆய்வகங்கள் உள்ளன. இதுவரை மொத்தம் கோவிட்-19 தொற்று அடைந்தவர்களில் 44.98 % குணமடைந்துள்ளனர்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

Most Popular

சொந்தவூருக்கு எடுத்துவரப்பட்ட உயிரிழந்த ராணுவ வீரரின் உடல்! கொட்டு மழையில் அஞ்சலி செலுத்திய மக்கள்!!

ரஜோரி மாவட்டத்தின் சந்தெர்பானி எல்லைப்பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த மதியழகன் படுகாயம் அடைந்தார். உடனடியாக...

பொதுத்தேர்வு எழுதவரும் மாணவர்களுக்கு காய்ச்சல் இருந்தால் வீட்டிற்கு அனுப்பப்படுவர்- தமிழக அரசு!

ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று...

கொரோனா எதிரொலி: ஹஜ் பயணம் ரத்து! 

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் விமான சேவை தடைபட்டதால் சவுதி அரேபிய அரசு கடந்த மார்ச் 12-ம் தேதியே ஹஜ் புனிதத் தலங்களை மூடிவிட்டது. இதுவரை இந்த ஆண்டு ஹஜ் புனிதப்...

கேரளாவில் புதிதாக 108 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 1,805 ஆக உயர்வு!

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூன் 30 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவிலும்...