தமிழகத்தில் அசுர வேகம் எடுக்கும் கொரோனா 2ஆம் அலை! இன்றைய பாதிப்பு நிலவரம்

 

தமிழகத்தில் அசுர வேகம் எடுக்கும் கொரோனா 2ஆம் அலை! இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1கோடியே 56 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 83 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

Delhi Coronavirus cases Death toll breaks all previous records on 19 April  2021 । Delhi Corona Update: दिल्ली में पहली बार 24 घंटे में 240 लोगों की  मौत, 23 हजार से ज्यादा

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 11,681பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்து 25ஆயிரத்து 59 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 84,361 ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 6,973பேர் ஆண்கள், 4,708பேர் பெண்கள். தமிழகத்தில் 263 பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் அசுர வேகம் எடுக்கும் கொரோனா 2ஆம் அலை! இன்றைய பாதிப்பு நிலவரம்

இன்று 53 பேர் உயிரிழந்துள்ளார். 32 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 21 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,25ஆக அதிகரித்துள்ளது. இன்று 7,071பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 927,440ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.