தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக,586 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில்சென்னை மற்றும் திருநெல்வேலியில் மட்டுமே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் தலா ஒருவர் வீதம் 2 பேர் மட்டுமே ஒரே நாளில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கொரோனா பாதிப்புகள் பதிவாகவில்லை.

தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 586 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 34 ஆயிரத்து 171ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 4,984 ஆக குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் 63, 073 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் பரிசோதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 55லட்சத்து 77ஆயிரத்து 766ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 366பேர் ஆண்கள், 220 பேர் பெண்கள்.

இன்று மட்டும் மொத்தம் 2பேர் உயிரிழந்துள்ளனர். 1பேர் தனியார் மருத்துவமனையிலும், 1பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,309 ஆக அதிகரித்துள்ளது. இன்று 673பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 16ஆயிரத்து 878ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது