`திடீரென காரை நிறுத்தினார்; அறிவுரை வழங்கினார் ; மாணவிகளுடன் உரையாடினார்!’- முதல்வரின் கொரோனா விழிப்புணர்வு

 

`திடீரென காரை நிறுத்தினார்; அறிவுரை வழங்கினார் ; மாணவிகளுடன் உரையாடினார்!’- முதல்வரின் கொரோனா விழிப்புணர்வு

திருச்சி செல்லும் வழியில் சாலையோரத்தில் நின்ற பொதுமக்களை பார்த்ததும், காரை நிறுத்திய முதல்வர் பழனிசாமி, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுரை கூறியதோடு, மாணவ- மாணவிகளிடம் உரையாடிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

`திடீரென காரை நிறுத்தினார்; அறிவுரை வழங்கினார் ; மாணவிகளுடன் உரையாடினார்!’- முதல்வரின் கொரோனா விழிப்புணர்வு

திருச்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அங்கு சென்றார். பல கார்கள் அணி வகுத்து செல்ல நடுவில் முதல்வரின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையோரத்தில் கிராம மக்கள் நின்று கொண்டிருந்தனர். அவர்களை பார்த்ததும் முதல்வர் பழனிசாமி உடனடியாக காரை நிறுத்த சொன்னார். பின்னர் காரில் இருந்து கீழே இறங்கிய முதல்வர் பழனிசாமி, அனைவரும் முகக்கவசம் போடுங்கள் என்று கூறிக்கொண்டே மக்களை நோக்கி நடந்து வந்தார். எல்லோரும் துண்டு கட்டினால்போதும். வீட்டில் துண்டு இருக்குல்ல என்று முதல்வர் கேட்டார். இருக்கிறது என்று அங்கிருந்தவர்கள் பதில் அளித்தனர்.

உங்கள் பகுதியில் தேவையான நீர் கிடைக்கும் என்று மக்களிடம் கூறிய முதல்வர் பழனிசாமி, வெளியில் போகும்போது தயவு செய்து முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். இந்த நோய் கண்ணுக்கு தெரியாது. புற்றுநோய் மாதிரி. வந்துட்டுன்னா குடும்பம் முழுவதும் பரவிவிடும் என்று அறிவுரை கூறிவிட்டு புறப்பட்ட முயன்ற முதல்வர், திடீரென அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் என்ன படிக்கிறீங்க என்று கேட்டார். ஒரு மாணவனிடம் நீ என்ன படிக்கிறாய், எந்த பள்ளிக்கு செல்கிறாய் என்று முதல்வர் கேட்க, 9ம் வகுப்பு படிக்கிறேன் என்றும் திருவாச்சியூரில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறேன் என்றும் மாணவன் பதில் அளித்தான்.

`திடீரென காரை நிறுத்தினார்; அறிவுரை வழங்கினார் ; மாணவிகளுடன் உரையாடினார்!’- முதல்வரின் கொரோனா விழிப்புணர்வு

அடுத்து மாணவி ஒருவரிடம் நீ என்ன படிக்கிறாய் என்று முதல்வர் கேட்க, 8ம் வகுப்பு படிக்கிறேன் என்றும் மற்றொரு மாணவி 3ம் வகுப்பு படிக்கிறேன் என்றும் புன்சிரிப்புடன் கூறினார். அடுத்து ஒரு மாணவியிடம் என்ன படிக்கிறாய் என்று முதல்வர் கேட்க, நானும் 3ம் வகுப்பு படிக்கிறேன் என்றார். அனைவரிடமும் நலம் விசாரித்த முதல்வர் பின்னர் அங்கிருந்த காரில் புறப்பட்டு சென்றார். முதல்வரை நேரில் பார்த்ததில் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் குதித்தனர்.