முதல்வர் எடப்பாடி சேலத்திலிருந்து சென்னைக்கு அவசர வருகை… இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்?

முதல்வர் எடப்பாடி சேலத்திலிருந்து சென்னைக்கு அவசர வருகை… இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்?

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு தற்போது பத்தாயிரத்தை நெருங்கிவருகிறது. இறப்பு எண்ணிக்கையும் படிபடியாக உயர்ந்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு வலியுறுத்துகிறது.

முதல்வர் எடப்பாடி சேலத்திலிருந்து சென்னைக்கு அவசர வருகை… இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்?

அதிகரித்து வரும் தொற்றை ஆரம்பத்திலேயே தடுப்பதற்காக இம்மாத தொடக்கத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அந்தக் கட்டுப்பாடுகள் ஏப்ரல் 10ஆம் தேதி முதல் அமலில் உள்ளன. இருப்பினும் இவை பலனளிக்கா விட்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவோம் என்று அரசு எச்சரித்திருந்தது.

முதல்வர் எடப்பாடி சேலத்திலிருந்து சென்னைக்கு அவசர வருகை… இன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும்?

கட்டுப்பாடுகள் பலனளிக்கவில்லை என்றே தெரிகிறது. அதனால் தான் நேற்று முன்தினம் தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன் தலைமையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை. இச்சூழலில் முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இதற்குப் பின் மேலும் புதிய கட்டுப்பாடுகளும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பும் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்திற்காக சேலத்திலிருந்து இன்று சென்னை திரும்புகிறார் முதலமைச்சர்.