கே.என்.லட்சுமணன் மறைவு : பிரதமர் பிரதமர் மோடி இரங்கல்!

மேலும் கே.என்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 92.

சேலம் செவ்வாய் பேட்டையில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தவர் தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரான கே.என்.லட்சுமணன். தமிழக பாஜக தலைவராக 2 முறை தேர்வு செய்யப்பட்ட இவர் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்நிலையில் கே.என்.லட்சுமணன் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “தமிழக மக்களுக்கு பணியாற்றுவதிலும் தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சி அடைய வைத்ததிலும் பெரும் பங்காற்றியவர் லட்சுமணன். அவசரநிலை காலத்தில் அவரது பங்களிப்புகள் நினைவுகூறத்தக்கவை. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் கே.என்.லட்சுமணன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் எல். முருகன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

எஸ்.ஐ. வில்சன் கொலை: என்.ஐ.ஏ. குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் கடந்த ஜனவரி மாதம் பணியிலிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் அப்துல் சமீம் மற்றும் தஃவ்பீக் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் குற்றவாளிகள்...

கோயம்பேடு காய்கனி சந்தை விவகாரத்தில் பொறுப்புகளை தட்டிக் கழிக்காதீர்கள்- மக்கள் நீதி மய்யம்

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 3,680 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர்...

பெண்களைப் பாடாய்ப்படுத்தும் பொடுகுத்தொல்லைக்கு தீர்வு!

பொடுகு... தலையில் அழுக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொடுகு சேர்ந்தால் பெரிய தொல்லைகளுக்கு வழிவகுக்கும். தலையில் அரிப்பு,கொப்புளம் என பிரச்சினைகள் தொடரும். அதுமட்டுமல்ல இந்த பாதிப்பு நீடித்தால் தலைமுடி அதிகமாக உதிரத் தொடங்கும்....

திருச்சி சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் உறவினர் செந்தில் கைது!

திருச்சி 9ஆம் வகுப்பு மாணவி கொலை தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய மேலும் கூடுதலாக 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சோமரசம்பேட்டை அருகே உள்ள அரியாவூர் அதவத்தூர் பாளையத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் மகள் நேற்று மதியம்...
Open

ttn

Close