6 மாவட்டச் செயலாளர்களுக்கு வலைவிரித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் தி.மு.க?

 

6 மாவட்டச் செயலாளர்களுக்கு வலைவிரித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் தி.மு.க?

தி.மு.க துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமியைத் தொடர்ந்து ஆறு மாவட்டச் செயலாளர்களுக்கு பா.ஜ.க வலைவிரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் காலுன்றவே முடியாத நிலையில் பா.ஜ.க உள்ளது. இதற்கு திராவிட கட்சிகளை அழிக்க வேண்டும், கழகங்கள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பல திட்டங்கள் தீட்டப்பட்டன. ஆனால், கடைசியில் அ.தி.மு.க-விடம் சரணாகதி அடைத்து கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இருப்பினும் அ.தி.மு.க-வின் கட்டுப்பாடு தற்போது பா.ஜ.க கையில் உள்ளதால் கிட்டத்தட்ட அது அழிந்தது போலத்தான், ஆட்சி முடிந்தால் காட்சிகள் மாறும் என்று பா.ஜ.க-வினர் கூறிவருகின்றனர்.

6 மாவட்டச் செயலாளர்களுக்கு வலைவிரித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் தி.மு.க?
தி.மு.க-வை அழிக்க வேண்டும், ஸ்டாலினை எந்த விலை கொடுத்தாவது முதலமைச்சர் ஆவதைத் தடுக்க வேண்டும் என்று பா.ஜ.க தலைவர்கள் வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். இதற்கான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டும் வருகின்றனர். தி.மு.க இந்து விரோத கட்சி என்று குழப்பம் ஏற்படுத்தப் பார்த்தனர். ஆனாலும், மக்கள் தி.மு.க-வுக்கு வாக்களிப்பதை தடுக்க முடியவில்லை.
இதனால், கட்சியில் இருந்து முக்கியத் தலைவர்களை இழுத்து கட்சியை உடைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது பா.ஜ.க. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவான காலமே உள்ளதால் இதற்குள்ளாக பல முக்கிய நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க பா.ஜ.க திட்டமிட்டு வருகிறது. தற்போது ஆறு மாவட்டச் செயலாளர்களுடன் அது பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றைக் காட்டி இழுக்கும் வேலையில் அது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தி.மு.க தரப்பு அதிர்ச்சியடையும் என்று பா.ஜ.க நம்புகிறது.

6 மாவட்டச் செயலாளர்களுக்கு வலைவிரித்த பா.ஜ.க! – அதிர்ச்சியில் தி.மு.க?
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு ஆட்சி, மோடியின் ஆறு ஆண்டு ஆட்சி, கொரோனாவை கையாண்ட விதம் என வர உள்ள சட்டமன்ற தேர்தல் தி.மு.க-வுக்கு சாதகமாகவே உள்ளது. பெரிய தலைவர்களை இழுத்தாலும் தொண்டர்களை இழக்க முடியாது, மக்கள் மனநிலையை மாற்ற முடியாது. இதனால் பா.ஜ.க-வின் முயற்சிகள் பலன் அளிக்காது. இவை அனைத்தும் மக்களை நேரில் சந்தித்து வரும் மாவட்டச் செயலாளர்களுக்கும் மற்றும் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். எதையும் எதிர்கொள்ளும் நிலையில் நாங்கள் உள்ளோம் என்று தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.