தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைப்பு!

 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைப்பு!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளைக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.

கொரோனா பாதிப்பால் தமிழக குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரை எப்படி நடத்துவது என்ற கேள்வி வெகுவாக எழுந்தது. அதனைத்தொடர்ந்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டு கலைவாணர் அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதே போல, கொரோனாவால் செப்.14 (இன்று) முதல் செப்.16 ஆம் தேதி வரை 3 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என சட்டப்பேரவை செயலாளர் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைப்பு!

அதன் படி, இன்று தமிழக சட்டப்பேரவையின் முதல் நாள் கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்பி வசந்த்குமார், திமுக ஜெ,அன்பழகன் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டதோடு கொரோனாவால் மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நினைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை நாளைக்கு ஒத்திவைத்துள்ளார் சபாநாயகர் தனபால். மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கூட்டத்தொடரை ஒத்திவைத்த சபாநாயகர் நாளை காலை 10 மணிக்கு 2ஆம் நாள் அவை கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.