4 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறதா தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர்?!

 

4 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறதா தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர்?!

கொரோனா அச்சுறுத்தலால் தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஆண்டுதோறும் இரண்டு முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்படுவது வழக்கம். இந்த முறை கொரோனா வைரஸ் பரவியதால், சட்டபேரவை கூட்டத் தொடரை எப்படி நடத்துவது என சந்தேகம் எழுந்தது. அதுமட்டுமில்லாமல் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதால் கூட்டத்தொடரை மாற்று இடத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி, கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடரை நடத்தலாமா என சபாநாயகர் தனபால் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

4 நாட்கள் மட்டுமே நடைபெறுகிறதா தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர்?!

அதன் பிறகு, சட்டப்பேரவை கூட்டத்தொடரை கலைவாணர் அரங்கிலேயே நடத்த முடிவு எடுக்கப்பட்டதன் படி, பொதுப்பணித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 4 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டத்தொடரை தொடங்குவதற்கு முன்னர் எம்எல்ஏக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.