‘தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு’ – தேர்தல் ஆணையம் தகவல்!

 

‘தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு’ – தேர்தல் ஆணையம் தகவல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வாக்காளர் இறுதி பட்டியல் தயார் செய்யும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் தமிழகம் வந்திருந்த இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான குழு, தேர்தல் குறித்து மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியது.

‘தமிழகத்தில் 2 கட்டமாக தேர்தல் நடத்த முடிவு’ – தேர்தல் ஆணையம் தகவல்!

அப்போது, மே மாதத்திற்கு முன்னரே தேர்தல் நடத்துமாறு அதிமுகவும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்துமாறு திமுகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது. மேலும், பீகாரில் 3 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டதை போன்று தமிழகத்திலும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது. கூடுதலாக 1000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டிருப்பதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு கூறினார்.

இவ்வாறு தேர்தல் குறித்து பல தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தற்போது சட்டமன்ற தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.